
posted 21st April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நோன்புப் பெருநாள் வாழ்த்து
நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் முஸ்லிம்கள் அனைவருக்கும் அனைத்து நற்பாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என நாம் இப்பெருநாளில் உளமாற வாழ்த்துகின்றோம், இவ்வாறு ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீட் விடுத்துள்ள பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஒரு மாத காலம் நோன்பு நோற்று இரவில் இறைவனை தொழுது ரமழான் மாதத்தை கௌரவித்த உலகளாவிய முஸ்லிம்களுக்கு நோன்புப்பெருநாள் என்பது இறைவன் கொடுத்த கொடையாகும்.
இந் நந்நாளில் முஸ்லிம்கள் தம் உறவினர்களுடனும் அயலவர்ககுடனும் தம்மை அண்டித்து வாழும் ஏனைய இன சகோதரர்களுடனும் தமது பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய காங்கிரசும் இவர்களுடன் சேர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவிக்கிறது.
ரமழானில் ஏழைகளை தேடிச்சென்று அவர்களுக்கான உதவிகளை செய்தது போல் இப் பெருநாளை தொடர்ந்து வரும் நாட்களில் அவ்வாறே செயற்பட உறுதி கொள்வோம்.
அதே போல் நாட்டில் உள்ள தற்போதைய நல்ல சூழல் மேலும் சிறப்பாக அமைய இந்தப்பெருநாளில் அனைவரும் ஒன்று பட்டு செயற்பட திடசங்கற்பம் பேணுவோம்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)