
posted 20th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offe
நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் சிறந்த முன்மாதிரி
நிந்தவூரிலுள்ள பள்ளிவாயல்களில் கடமை புரியும் சுமார் நாற்பதுக்கும் மேற்பட்ட முஅத்தின்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்வின் போது இளம் சமுக சேவை செயற்பாட்டாளரும், பிர்தௌஸ் ஜும்ஆ பள்ளிவாயலின் பிரதம இமாமுமாகிய அல் ஹாபிழ் மௌலவி ஏ.பி.எம்.ஷிம்லி (நஹ்லி) அவர்களின் நெறிப்படுத்தலில் நிந்தவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீபின் சொந்த குடும்ப நிதியிலிருந்து சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாவுக்கு மேலான பெறுமதியுடைய பெருநாள் பொதிகள் (சேர்ட், சாறன்கள்) அடங்கிய பொதிகள் முஅத்தின்மார்களுக்கு வழங்கிவைக்கப்படது
இந்த வைபவம் சிவில் சமுக செயற்பாட்டாளரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எம். றஸீன் தலைமையில் நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாயல் கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த வைபவத்தில் நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம். நஜீப், கல்முனைப் பிராந்தியத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரி.எச்.டி.எம்.எல். புத்திக்க, நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லத்தீப், நிந்தவூர் ஜும்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்ஹாஜ். எஸ்.எம்.பி. இப்றாகிம், பொலிஸ் பொறுப்பதிகாரியின் புதழ்வர் அவாசிக் அஹமட் நஜீப், பிரதேச சபை நிருவாக உத்தியோகத்தர் சரீம், மௌலவி. அல்ஹாபிழ் ஏ.எம். ஷிம்லி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
புனித நோன்பு காலத்தில் சிறப்பான பணியை வழங்கியுதவிய நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி நஜீப் அவர்களுக்கு நிந்தவூர் பொது மக்கள் பெரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
குறித்த நேரத்தில் தங்களது கடமைகளைச் செய்பவர்களில் பள்ளிவாயல்களில் கடமையாற்றும் முஅத்தின்மார்களின் பங்கு மகத்தானது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)