
posted 11th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நிந்தவூர் பிரதேச செயலக இப்தார்
நிந்தவூர் பிரதேச செயலகத்தின் வருடாந்த இப்தார் - நோன்பு திறக்கும் நிகழ்வு நோன்பின் 18 ஆவது தினமான திங்கட்கிழமை (10) மாலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப் தலைமையில், பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்வில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.
அத்துடன் திகாமடுள்ள மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷாரப் சிறப்பு அதிதியாகவும், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீஸன், அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ், ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
அதேவேளை மாவட்டத்தின் பல்வேறு பிரதேச செயலக, பிரதேச செயலாளர்கள் மற்றும் முக்கியஸ்த்தர்களும், பிரதேச முக்கியஸ்த்தர்களும் பெருமளவில் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும், நிகழ்வில் மௌலவி எம்.ஜி. அப்துல் கமால் (இஸ்லாஹி) சிறப்பு சன்மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தியதுடன், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் எம்.ரி.எம். சரீம் நன்றி உரையும் ஆற்றினார்.
பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் ரி. ஜெஸான், திட்டமிடல் உதவிப்பணிப்பாளர் ஏ.எம். சுல்பிகார், கணக்காளர் சாஜிதா சிரேஷ்ட சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.சீ. அன்வர், உட்பட பிரதேச செயலக தமிழ், முஸ்லிம் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் நிகழ்வில் ஒருங்கிணைந்து கலந்து சிறப்பித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய முக்கியமான நிகழ்வில் தமக்கும் கலந்து கொள்ளச் சந்தர்ப்பம் கிடைத்தமை குறித்து பெருமகிழ்வடைவதாக மாவட்ட அரசாங்க அதிபர் டக்ளஸ் தனது உரையில் குறிப்பிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)