
posted 4th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நான்காவது நபராக இருந்து விடாதே
கற்பவனாய் இரு. கற்றுக் கொடுப்பவனாய் இரு. கற்பதற்குஉதவி செய்பவனாய் இரு. மாறாக நான்காவது நபராக இருந்து விடாதே என்கின்ற நபி மொழிக்கமைய புலம்பெயர்ந்து வாழும் தாயக உறவுகள் கல்வி மேமம்பாட்டுக்காக செய்யும் மகத்தான பணியை பாராட்டாமல் இருக்க முடியாது.
இவ்வாறு கல்முனை கல்வி வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி எம்.எச். றியாஸா குறிப்பிட்டார்.
புலம்பெயர்ந்து கனடா தேசத்தில் வாழும் முன்னாள் ஆசிரியர் பொன். சுகுமார் தாயக உறவுகளிடம் இருந்து பெற்ற நிதியில் பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் சகல மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்களை ஆசிரிய ஆலோசகர் மா. லக்குணம் மூலமாக வழங்கிய நிகழ்வு இப் பாடசாலை அதிபர் க. தியாகராசா தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எச். றியாஸா அங்கு மேலும் பேசுகையில்;
இலங்கையில் இலவச கல்வி முறை அமுலில் உள்ள போதிலும் வறிய மாணவர்கள் தமது சில தேவைகளை தற்போதைய பொருளாதார கஷ்ட நிலையில் பூர்த்தி செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர். இத்தகைய சூழ் நிலையில் கனடாவில் வாழும் பொன். சுகுமார் ஆசிரியர்கள் வறிய மாணவர்களின் தேவைகளை நிறைவேற்ற முன்வந்தமை குறித்து எமது அலுவலகம் சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கின்றேன்.
இதே வேளை பெற்றோர் இத்தகைய கொடையாளர்களின் எண்ணங்களை ஈடேற்றும் வகையில் தத்தமது பிள்ளைகள் கல்வி மற்றும் ஒழுக்க நிலைகளில் சிறந்து சமூகப் பொருத்தப்பாடு மிக்க நற்பிரஜைகளாக மிளிர கூடிய அக்கறை செலுத்த வேண்டும் என்றார்.
இந் நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா மலிக் அதிபர்களான க. தியாகராசா செல்லையா பேரின்பராசா ஆசிரிய ஆலோசகர்களைன க. சாந்தகுமார், மா. லக்குணம், கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையின் நிர்வாக உத்தியோகத்தர் தேவஅருள் ஆகியோர் உரையாற்றினர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)