நாடெங்கும் குதூகலப் புனித நோன்புப் பெருநாள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நாடெங்கும் குதூகலப் புனித நோன்புப் பெருநாள்

இலங்கையில் ஷவ்வால் மாத தலைப்பிறை நேற்று (21) வெள்ளிக்கிழமை தென்பட்டதால் இன்று சனிக்கிழமை (22.04.2023) முஸ்லிம் மக்கள் புனித நோன்புப் பெருநாளை பெரும் குதூகலத்துடன் விமரிசையாகக் கொண்டாடினர்.

கடந்த மூன்று வருடகாலமாக கொவிட் தொற்று, மற்றும் நாட்டு நிலமைகள் காரணமாக பெருநாள் பண்டிகைகள் சோபை இழந்திருந்த நிலையில் தற்போதய நாட்டின் நிலமை காரணமாக இம்முறை நோன்புப் பெருநாளையும் மகிழ்ச்சிப் பிரவாகத்துடனும், குதூகலத்துடனும் கொண்டாடும் சூழ்நிலை தோற்றம் பெற்றிருந்தது.

இதேவேளை நோன்புப் பெருநாளை முன்னிட்டு முஸ்லிம் பள்ளிவாசல்கள் தொடர்பில் பாதுகாப்பு வேலைத்திட்டம் ஒன்றை பொலிஸார் அமுல்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் நோன்புப் பெருநாள் களை கட்டியிருந்தது.

குறிப்பாக பள்ளிவாசல்கள், பொது மைதானங்கள் மற்றும் திடல்களில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகையிலும், பெருநாள் குத்பாவிலும் பெருமளவான முஸ்லிம்களும், விசேடமாக பெண்களும் கலந்து கொண்டனர்.

நிந்தவூர் ஜாமிஉத்தௌஹீத் ஜும்ஆபள்ளிவாசலின் ஏற்பாட்டில் நோன்புப் பெருநாள் தொழுகையும் பெருநாள் குத்பாவும், பெருமளவு ஆண், பெண்களின் பங்குபற்றுதலுடன் நிந்தவூர் அல்-அஷ்றக் தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.

மேற்படி பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் மௌலவி. இத்ரீஸ் ஹஸன் (ஸஹ்வி) அவர்கள் பெருநாள் தொழுகையை நடத்தியதுடன் பெருநாள் குத்பா பிரசங்கத்தையும் நிகழ்த்தினார்.

நாடெங்கும் குதூகலப் புனித நோன்புப் பெருநாள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)