நல்லூரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

நல்லூரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

தமிழரின் மரபுரிமைகளை பாதுகாப்போம் என்ற தொனிப் பொருளில் 5 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நல்லூரில் நேற்று (16) அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அத்துடன், கையெழுத்துப் போராட்டமும் ஆரம்பிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு என்ற அமைப்பின் அழைப்பின் பேரில் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி தொடக்கம் 4 மணி வரை நல்லை ஆதீன முன்றலில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில்,

  • அழிக்கப்பட்ட வெடுக்குநாறி மலை ஆதி சிவன் கோவில் சிவலிங்கம், தெய்வ சிலைகள் உடனடியாக மீள அமைக்கப்படவேண்டும்.
  • நீதியான விசாரணை துரிதப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டறியப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்
  • குருந்தூர் மலை, கன்னியா வெந்நீரூற்று ஆதி சிவன் வழிபாட்டு உரிமைகள் உடனடியாக மீள வழங்கப்பட வேண்டும்
  • புதிய பௌத்த கட்டுமானம் மற்றும் பௌத்த தொல்லியல் புதிய அரசிதழ் இரத்து நடைமுறையில் செயல்படுத்தப்பட வேண்டும்.
  • இன மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் தமிழர் தாயகத்தின் தொன்மங்களை, மரபுரிமைகளை மாற்றியமைக்கும் தொல்லியல் திணைக்களத்தின் அத்துமீறிய செயல்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்
  • மட்டக்களப்பு மயிலத்தனை மடு மேய்ச்சல் தரையில் பெரும்பான்மை இன மக்களின் ஆக்கிரமிப்புக்கள் சகலதும் நிறுத்தப்பட்டு தமிழ் பண்ணையாளர்களின் மரபுரிமையான மேய்ச்சலுக்கான வாழ்வுரிமை உறுதிப்படுத்த வேண்டும்.
  • போருக்கு பிந்திய இன, மதப்பரம்பலை மாற்றி அமைக்கும் திட்டமிட்ட பெரும் குடியேற்றம் உள்ளிட்ட செயல்பாடுகள் அனைத்தும் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்

ஆகிய முதன்மை கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

நேற்றைய இந்தப் போராட்டத்தில் சைவ, கத்தோலிக்க மத பீடங்களின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களான த. சித்தார்த்தன், சி. சிறீதரன், க. வி. விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராசா, ஈ. பி. ஆர். எல். எவ்வின் தலைவர் சுரேஷ் பிறேமசந்திரன் உட்படப் பல பிரமுகர்கள் தமிழ்த் தேசிய ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

நல்லூரில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)