
posted 28th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தையிட்டியில் பௌத்த விகாரை
காங்கேசன்துறை தையிட்டியில் இராணுவத்தினரால் அடாத்தாக தனியார் காணியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு நேற்று வியாய க்கிழமைை கலசம் வைக்கப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.
நேற்றைய (27) தினம் இந்தப் பகுதியில் அதிகளவான இராணுவம், பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அத்துடன், விகாரைக்கு செல்லும் வழியில் பௌத்த கொடிகள் - தோரணங்களாக அமைக்கப்பட்டிருந்தன. அப்பகுதிக்கு செல்வதற்கு செய்தியாளர்களுக்கோ, அப்பகுதி மக்களுக்கோ அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
எனினும், தையிட்டி விகாரைக்கு கலசம் வைக்கும் நிகழ்வு முன்னெடுக்கப்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.
இதனிடையே, தையிட்டில் தனியார் காணியில் அமைக்கப்பட்ட விகாரையே யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட மிக உயரமான விகாரையாகும். இந்த விகாரை முழுமையாக இராணுவத்தினரால் கட்டப்பட்டு வந்தது. அங்கு பௌத்த பிக்கு ஒருவரும் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வலி. வடக்கு பிரதேசம் இராணுவத்தினரின் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த சமயத்திலேயே இந்தக் காணிக்குள் புத்தர் சிலை வைக்கப்பட்டு விகாரை அமைக்கும் பணி முன்னெடுக்கப்பட்டது. இந்தப் பகுதிகள் சில மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டபோதே இங்கு விகாரை அமைக்கப்படும் தகவல் வெளிவந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)