
posted 6th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தேவை ஏற்படின் திருத்தப்பட வேண்டிய புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம்
புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில், முன்னர் இருந்த சட்டங்களைப் போன்று ஆபத்தான கூறுகள் காணப்பட்டால் அது திருத்தியமைக்கப்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
ஆரையம்பதி பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தில், அரிசி பகிர்ந்தளிக்கும் நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மியன்மார் அரசாங்கத்திடம் வர்த்தக வாணிபத்துறை அமைச்சு விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் வழங்கப்பட்ட அரிசி, நாட்டின் பல பாகங்களிலும் வறிய நிலையில் உள்ள மக்களுக்கு பகிர்தளிக்கப்படுகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்திற்காக 9000 அரிசி பொதிகள் வழங்கும் செயற்திட்டத்தில் முதல் கட்டமாக மண்முனை மேற்கு ஆரையம்பதி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் தெரிவு செய்யப்பட்ட 500 பயனாளிகளுக்கு அரிசிப்பொதிகள் வழங்கப்பட்டன.
அரிசிப் பொதிகளை வழங்கும் நிகழ்வு நேற்று முன் தினம் (03) ஆரையம்பதி பலநோக்கு கூட்டுறவுச் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)