
posted 9th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரம்
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு வாரத்தை முன்னிட்டு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஐ.எல்.எம். றிபாஸின் வழிகாட்டலுக்கு அமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்கு உட்பட்ட சாய்ந்தமருது, அட்டாளைசேனை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு போன்ற சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பிரதேசங்களில் களப் பரிசோதனையும், டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நேற்று முன் தினம் ஆரம்பித்த இந்த நிகழ்வானது எதிர்வரும் 10 திகதி வரை இடம்பெறவுள்ளது.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இடம்பெற்ற களப்பரிசோதனை மற்றும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கையில் கல்முனை பிராந்திய தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.ஏ.சீ.எம். பசால் நேரடியாக விஜயம் செய்து ஆய்வை மேற்கொண்டார்.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே. எம். அர்சத் காரியப்பரின் பணிப்பின் பேரில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச்சுகாதார பரிசோதகர் எம்.என்.எம். பைலான் தலைமையிலான பொதுச்சுகாதார பரிசோதகர்கள், ஏனைய பிரதேசங்களை சேர்ந்த பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சாய்ந்தமருது இளைஞர் சேவை அதிகாரி எம்.எம். ஷமீலுள் இலாஹி, டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், சாய்ந்தமருது இளைஞர் கழக சம்மேளன பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)