
posted 15th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
திருத்தப்படும் குமுதினி படகு
வல்வெட்டித்துறை பகுதியில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் குமுதினி படகினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சென்று பார்வையிட்டுள்ளார்.
நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக மாவிலித்துறையில் தரித்திருந்ததுடன் திருத்தப்பணிகளுக்காக வல்வெட்டித்துறைக்கு கொண்டு செல்லப்பட்டு நீண்ட காலமாக திருத்த பணிகள் முன்னெடுக்கப்ட்டு வருகினிறன.
வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான குமுதினி படகு மற்றும் வட தாரகை படகு என்பன நெடுந்தீவுக்கான பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபட்டு வந்த நிலையில் குமுதினி படகு பழுதடைந்தடைந்ததையடுத்து வடதாரகை படகு மாத்திரமே சேவையில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் நெடுந்தீவுக்கான போக்குவரத்தில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் திருத்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் குமுதினி படகின் திருத்தப்பணிகளை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், நெடுந்தீவைச் சேர்ந்த ஓய்வு நிலை அதிபர் வரதன், நெடுந்தீவைச் சேர்ந்த கட்சியின் செயற்பாட்டாளர்கள் சென்று பார்வையிட்டு அதன் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)