
posted 16th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தலைவர் ரவூப் ஹக்கீம் கலந்துகொண்டார்
நாட்டில் பல்வேறு கிளைகளை கொண்டு இயங்கும் பிரபல தனியார் உயர் கல்வி நிறுவனமான மெற்ரோபொலிட்டன் கல்லூரியின் வருடாந்த இன நல்லுறவுக்கான இப்தார் நிகழ்வு கல்லூரி முதல்வரும், ஸ்தாபக தவிசாளரும் கல்முனை மாநகர சபை முன்னாள் மேயருமான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் தலைமையில் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இன்று (16) இடம்பெற்றது.
மறைந்த சாய்ந்தமருதின் மூத்த உலமாவும், கல்விமானுமான மௌலவி யூ.எல்.எம். காஸிம் மௌலவிக்கான விசேட துஆ பிராத்தனையும், மார்க்க சொற்பொழிவும் மௌலவி எம்.எச்.எம்.நிப்ராஸ் (ரஹ்மானி) அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் உலமாக்கள், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான பைசால் காஸிம், முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கல்முனை மாநகர ஆணையாளர் அஸ்மி ஆதம்லெப்பை, கல்முனை பிரதேச செயலாளர் ஜே. லியாக்கத் அலி உட்பட பிரமுகர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரமுகர்கள், கல்விமான்கள், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் உத்தியயோகத்தர்கள், மெற்ரோபொலிட்டன் கல்லூரி உத்தியோகத்தகர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
தவிசாளர் கலாநிதி சிராஸ் மீரா சாஹிப் உரையாற்றுகையில் தலைநகரில் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தமது கல்லூரி சிறந்த தேவையினை ஆற்றிவருவதாகவும் இக் கல்லூரியில் பட்டம் பெற்ற பெருந்தொகையான இளைஞர்கள் வெளிநாடுகளில் நல்ல தொழில்வாய்ப்புக்களை பெற்று நல்ல நிலையில் உள்ளனர்.
நாம் வழங்கும் பெறுமதிமிக்க பட்டங்களே இதற்கு முக்கிய காரணமாகும் எமது இந்த கல்விச் சேவை நாடளாவிய ரீதியில் பரந்துபட அர்ப்பணிப்புடன் முன்னெடுப்போம் என்று கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)