தமிழ் - சிங்கள புத்தாண்டு பண்டிகை

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

தமிழ் - சிங்கள புத்தாண்டு பண்டிகை

இலங்கையில் தமிழ் - சிங்கள புத்தாண்டு பண்டிகைக் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வருகின்றனர்.

கடந்த வருடங்களை விடவும் இம்முறை இந்த புத்தாண்டு கொண்டாட்டங்கள் புதுப்பொலிவுடனும், குதூகலத்துடனும் கொண்டாடப்படவுள்ளது.

இதற்கு ஏதுவாக தலைநகர் கொழும்பிலிருந்து முக்கிய நகரங்களுக்கான ரயில், பஸ்போக்கு வரத்து சேவைகள் இடம்பெறவுள்ள நிலையில் தனியார் பஸ் போக்குவரத்து சேவைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இத்தனியார் சேவைகள் இன்று முதல் ஆரம்பமாவதாகவும் அறிவிக்கப்பட்;டுள்ளது.

இதேவேளை பண்டிகைக்காலத்தையொட்டி நாட்டில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்,
மக்களுக்கு பண்டிகைக் காலத்துக்கென அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாட்டின்றியும், நியாய விலையிலும் கிடைப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

இதன்படி லங்கா சதொச மூலம் தட்டுப்பாடின்றி பொருட்கள் கிடைக்க ஆவன செய்யப்பட்டுள்ளதுடன், விசேடமாக விலைக் குறைப்புகளும் செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை மலரவிருக்கும் சித்தரைப் புத்தாண்டையொட்டி கிழக்கு மாகாணத்தின் பல்வேறு முக்கிய நகரங்களிலும் வியாபார நடவடிக்கைகள் களை கட்டியுள்ளன.

கல்முனை, மட்டக்களப்பு, காத்தான்குடி, ஏறாவூர், திருமலை, அக்கரைப்பற்று, சம்மாந்துறை போன்ற வியாபார நகரங்களில் மக்களின் நடமாட்டங்கள் தற்சமயம் அதிகரித்துள்ளன.

குறிப்பாக சித்திரைப் புத்தாண்டு காலத்திற்கென அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டிவருவதுடன்,
புத்தாடைகளுக்காக ஜவுளிக்கடைகளும் நிரம்பி வழிவதுடன் அங்காடி புடவை வியாபார நிலையங்களும் பல பிரதேசங்களில் அதிகரித்துள்ளன.

சித்திரைப் புத்தாண்டையொட்டி பல பிரதேசங்களிலும் கலாச்சார நிகழ்வுகள், பாரம்பரிய விளையாட்டுக்ப் போட்டிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் சில தனியார் வங்கிகள், வர்த்தக ஸ்தாபனங்கள் புதுவருடகொடுக்கல் - வாங்கல் தொடர்பான பரிசுத் திட்டங்களையும் அறிவித்துள்ளன.

மட்டக்களப்பில்

எதிர்வரும் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் பாரம்பரிய காலச்சார விளையாட்டு விழா ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கென விசேட கலந்துரையாடல் ஒன்றும் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதிபத்மராஜாவின் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்த விழாவை நடத்துவதற்காக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி சிறிகாந்தின் மேற்பார்வையின் கீழ், பொலிஸார் மாநகர சபையினர், லயன்ஸ் கழகத்தினர், இராணுவத்தினர், சமூக அமைப்பினர், கலாச்சார மற்றும் ஊடகப் பிரிவினர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்களடங்கிய குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் குறித்த பாரம்பரிய கலாச்சார விளையாட்டு விழாவை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று காரைதீவு, கல்முனை, திருக்கோவில், நாவிதன்வெளி வீரமுனை, மல்வத்தை போன்ற பல தமிழ்ப் பிரதேசங்களிலும் சித்திரைப் புத்தாண்டையொட்டிய பாரம்பரிய கலாச்சார விளையாட்டு விழாக்கள் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் - சிங்கள புத்தாண்டு பண்டிகை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)