
posted 2nd April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
தந்தை செல்வாவின் 125ஆவது பிறந்த தினம்
தந்தை செல்வாவின் 125ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் நேற்று (31) வெள்ளி நடைபெற்றது.
தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் நடந்த அஞ்சலியில் தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் ஆயர் ஜெபநேசன், தமிழரசு கட்சியின் தலைவர் மாவை. சோ. சேனாதிராசா, யாழ். மாநகர சபையின் முன்னாள் முதல்வர் இ. ஆனல்ட் ஆகியோர் உள்ளிட்ட தமிழரசு கட்சியினர் பங்கெடுத்து அஞ்சலி செலுத்தினர்.
காலை 9.30 மணிக்கு இந்த அஞ்சலி நிகழ்வு நிறைவடைந்த பின்னர் இலங்கை தமிழரசு கட்சியின் மூத்தஉபதலைவரும், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவருமான சீ.வீ.கே. சிவஞானம், மூத்த பத்திரிகையாளரும் தமிழரசு கட்சியின் யாழ். மாநகர வேட்பாளருமான ந. வித்தியாதரன், வலி. வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ச. சுகிர்தன் உள்ளிட்ட தமிழரசுக் கட்சியினர் தனியாகவும் சென்று அஞ்சலி செலுத்தினர்.
அண்மைக் காலமாக தமிழரசுக் கட்சிக்குள் கோஷ்டி பூசல்கள் அதிகரித்துள்ளது என்று குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், நேற்றைய தினம் தந்தை செல்வாவின் பிறந்தநாளிலும் இது எதிரொலித்தமையை அனைவராலும் அவதானிக்க முடிந்தது.
இதேவேளை, தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரியும் தந்தை செல்வா சதுக்கத்தில் தனியாக அஞ்சலி செலுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)