
posted 5th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஜனாதிபதியின் கரங்களைப் பலப்படுத்துவோம்
தற்போது நாட்டைக் கட்டியெழுப்பக்கூடிய ஒரே ஒரு தலைவரான கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களின் கரங்களைப் பலப்படுத்த பொருளாதார நிபுணர்களும் நாட்டு மக்களும் முன்வரவேண்டும் என இலங்கை ஜனநாயக முன்னணியின் தலைவர் அல்ஹாஜ் ஏ.பி. கமால்தீன் கூறினார்.
ஜனாதிபதி அவர்களின் நல்ல செயல்திட்டங்களுக்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகள் தங்களது சுய இலாபங்களுக்கு சோரம் போகாது நாட்டின் முன்னேற்றத்திலும், மக்களின் துயரத்திலும் பங்குகொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இலங்கை ஜனநாயக முன்னணியின் உயர் சபைக் கூட்டம், அட்டாளைச்சேனையிலுள்ள அதன் தலைமைக்காரியாலயத்தில் நடைபெற்ற போது, கூட்டத்திற்குத் தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தலைவர் கமால்தீன் தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் பின்வருமாறு கூறினார்.
2020ம் ஆண்டில் உலகத்தை ஆட்டிப்படைத்த கொடிய நோயான கொவிட்-19 காரணமாக நாட்டின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைக் கண்டது. இதன் காரணமாக 67 இலட்சம் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதியையும் மற்றும் பிரதம மந்திரியையும் பதவியிறக்கம் செய்தமை இலங்கை வரலாற்றில் என்றுமே நடைபெறாத ஒரு விடயமாகும்.
கடந்த 30 வருட கால யுத்தம், பின்பு ஏற்பட்ட சுனாமி அனர்த்தம், அதன் பின்னர் 2020ம் ஆண்டு ஏற்பட்ட கொவிட்-19 மற்றும் 2022ல் ஏற்பட்ட அரசுக்கெதிரான கிளர்ச்சி காரணமாக ஜனாதிபதியினதும், பிரதம மந்திரியினதும் பதவி விலகலோடு இலங்கையின் பொருளாதாரம் முடக்கப்பட்டதோடு சர்வதேச சமூகம் இலங்கைக்கு எந்தவொரு உதவியையும் செய்வதற்கு முன்வரவில்லை. இதனால் நாட்டின் பொருளாதாரம், மக்களின் வாழ்வாதாரம் மேலும் பாரிய பின்னடைவை அடைந்துகொண்டிருந்த இக்கட்டான நிலைமையில், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நாட்டின் அரசியல் தலைமைத்துவத்தை தைரியத்தோடு பொறுப்பேற்றதோடு சர்வதேச சமூகம், உலக வங்கி, உலக சுகாதார நிறுவனம், சர்வதேச நாணய நிதியம், மனித உரிமை அமைப்புக்களின் பேரவை போன்றவற்றின் உதவியை நாடியதன் விளைவாக நாடு இன்று படிப்படியாக முன்னேற்றம் கண்டு வருகிறது. இவற்றுக்கு முற்றுமுழுதான காரணம் தற்போதைய ஜனாதிபதியாகும். இதனை இந்நாட்டு மக்களும் அரசியல் தலைமைத்துவங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)