
posted 4th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ள பாரிய நிதி மோசடி சம்பந்தமாக விசாரணை நடத்துவது சம்பந்தமாக ஜனாதிபதி செயலகம் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அறிவித்துள்ளது.
கல்முனை மாநகர சபையில் இடம்பெற்றுள்ள இரண்டு கோடிக்கும் அதிகமான நிதி மோசடி சம்பந்தமாக ஆராய்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாரக் அப்துல் மஜீத் அவர்களை நியமிக்குமாறு அண்மையில் கட்சியின் பிரதித் தலைவர் சி.எம். மழ்ஹர்தீன் அவர்களால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்க்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைய ஜனாதிபதி செயலகம் இவ்வாறு கிழக்கு மாகாண ஆளுனரை வேண்டிக்கொண்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தின் இந்த நடவடிக்கையை ஐக்கிய காங்கிரஸ் கட்சி வரவேற்பதுடன் எமது கட்சியின் பிரதி தலைவரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு உடன் பதில் அளித்தமைக்காக ஜனாதிபதிக்கும் ஜனாதிபதி செயவகத்திற்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவர் சி.எம்.. மழ்ஹர்தீன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)