
posted 6th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சீரற்ற போக்குவரத்தால் பாதிப்படையும் கல்வி
நுவரெலியா போக்குவரத்து சபையின் கீழ் இயங்கி வந்த இராகலையில் இருந்து ஹைய்பொரஸ்ட் வழியாக கோணபிட்டிய குட்வுட் வரையிலான பேருந்து சேவை அண்மைகாலமாக நிறுத்தப்பட்டுள்ளமையால் பாடசாலை சமூகம் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாகி வருவதாக கவலை தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பேருந்து சேவையை பயன் படுத்தி வலப்பனை மற்றும் ஹங்குரன்கெத்த வலயத்திற்குற்பட்ட.
வஃமாகுடுகல. தவிஇ
வஃஹைய்பொரஸ்ட் இல.1 .த.விஇ
வஃஹைய்பொரஸ்ட் இல 3த.விஇ
வஃபிரம்லி த.விஇ
வஃஅருனோதயா இந்து கல்லூரிஇ
அல்மா. த.விஇ
சீட்டன். த.விஇ
ஹஃபாரதி த.விஇ
மெரிகோல்ட் த.விஇ
பிரின்சஸ் த.ம.விஇ
எலமுல்ல. த.விஇ
நாமகள் கல்லூரி
கபரகல தமவி
ஆகிய பல பாடசாலைகளுக்கு செல்லும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் இப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டுள்ளதால் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பேருந்து சேவை காலை 7.00மணிக்கு இராகலையிலிருந்து புறப்பட்டு ஹைப்பொரஸ்ட் வழியாக 8.00 மணிக்கு கோணபிட்டிய குட்வுட் வரை சேவையில் ஈடுபட்டு வந்தது.
எனினும் இந்த பேருந்து சேவை நிறுத்தப்பட்டமையால் பாடசாலைகளுக்கு உரிய நேரத்திற்கு ஆசிரியர்கள் பாடசாலைக்கு வருகை தர முடியாதன் காரணமாக மாணவர்களின் கற்பித்தல் செயற்பாடுகள் பாதிப்படைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த போக்கு வரத்து சேவை அடிக்கடி இடைநிறுத்தப் பட்டமையால் இந்த போக்குவரத்து சேவையினை முறையாக வழங்குமாறு ஆசிரியர்களால் பல போராட்டங்கள் நடாத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது 4 மாதங்களாக இந்த பேருந்து சேவை முற்று முழுதாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து சபையின் அதிகாரிகளும் பேருந்து பழுதாகியுள்ளது, ஓட்டுனர் இல்லை என பல சாக்குபோக்குகளை கூறி வருவதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அத்தோடு இப்பேருந்து சேவையhனது பெரும்பாலும் தமிழ் மொழி பாடசாலைகளுக்கு பிரயோசனமானதாக அமைந்துள்ளமையால் போக்குவரத்து சபை அதிகாரிகள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டு வருகின்றது.
எனவே மலையகத்தில் இவ்வாறான கஷ்ட பிரதேச பாடசாலைக்கான கல்வியை சிறந்த ஆசிரியர்கள் சிறந்த முறையில் வழங்க மலையக அமைச்சர்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கின்றோம் என அதிபர்கள் ஆசிரியர்கள் சார்பாகவும் கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)