
posted 2nd April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சிறீதரனின் நேர்காணல்
தமிழரசு கட்சியின் தலைமையை ஏற்பதற்கு தனது பூரண ஆதரவு இருக்கும் என்று சுமந்திரன் எம். பி. கூறியிருந்தார். நான் அவருக்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றினேன். எனவே, சுமந்திரன் சொன்னதைக் காப்பாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறார் இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன்.
யூ - ரியூப் தொலைக்காட்சி சனல் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அந்த நேர்காணலில் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் அவர் தெரிவித்த முக்கிய அம்சங்கள் மட்டும் வருமாறு,
“2020 தேர்தல் முடிவடைந்த பின்னர் பத்திரிகையாளர்கள் என்னைக் கேட்டபோது, எல்லோரும் விருப்பப்பட்டு வந்தால் கட்சி தலைமையை ஏற்க நான் தயார் என்று கூறினேன். மறுநாள் “நண்பர் சிறீதரனுக்கு என்னுடைய பூரண ஆதரவு இருக்கும்”, என்று சுமந்திரன் கூறினார்.
நான் கருத்து மாறமாட்டேன். நான் அன்று (பாராளுமன்ற தேர்தல் சமயத்தில் சுமந்திரனுக்கு ஆதரவளித்தமை) சொன்னதைக் காப்பாற்றினேன். எனவே, சுமந்திரன் சொன்னதைக் காப்பாற்ற வேண்டும். நான் என்னுடைய விருப்பத்தைத் தெரிவித்தேன். அதற்கு சுமந்திரன் தன்னுடைய கருத்தைத் தெரிவித்திருந்தார்.
பின்னர், ஓரிடத்தில் அவர் அளித்த பேட்டியின்போது, “எனக்கு (சுமந்திரன்) தலைமைத்துவம் வகிக்கும் தகுதி இல்லை. நான் இராஜதந்திர - அரசியல் நடவடிக்கைகளை கையாளுவேன். கட்சிக்கு தலைமைத்துவத்தை இன்னொருவரே வழங்க வேண்டும் என்றார். அது சரியானது. அவரிடம் உள்ள சட்டப் புலமை, மொழிப்புலமை, அவரின் இராஜதந்திரத் தொடர்புகள் எமக்கு தேவை.
தலைமைத்துவம் என்பது வேறு ஒருபக்கம், கட்சியின் அடிமட்டத் தொண்டனிலிருந்து மக்கள் மனங்களை அறிந்து - எண்ணங்களை புரிந்து கட்சியின் தலைமைத்துவத்தை வழிநடத்தி கட்சியை மேல் மட்டம் வரை கட்டிக்கொண்டுவருவது என்பது அது ஒரு வகையான தலைமைத்துவம். நான் அதை செய்வேன் என்ற தற்துணிவும், தைரியமும் எனக்கு இருக்கின்றது. அதற்கு தயாராக இருக்கிறேன்.
ஆனால், சுமந்திரன் இதற்கு போட்டியாவார் என்றால் நான் அவரை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)