சிறப்புற நடைபெறும் இப்தார் நிகழ்வு

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

சிறப்புற நடைபெறும் இப்தார் நிகழ்வு

முஸ்லிம்கள் அனுஷ்டித்துவரும் புனித நோன்பையொட்டிய இப்தார் எனப்படும் நோன்பு திறக்கும் நிகழ்வுகள் இம்முறை கிழக்கிழங்கையில் வெகு சிறப்பாக நடைபெற்றுவருகின்றன.

கிழக்கிலங்கையின் பல்வேறு முஸ்லிம் பிரதேசங்களிலும் பள்ளிவாசல்கள், அரச அலுவலகங்கள், வங்கிகள் உட்பட பல்வேறு பொது அமைப்புகளும், தனியாரும் சிறப்புற இப்தார் நிகழ்வுகளை நடத்தி வருகின்றன.

கடந்த மூன்று வருடகாலமாக நாட்டின் நிலமை மற்றும் கொவிட் பரவல் போன்ற காரணங்களால் இந்த வருடாந்த இப்தார் நிகழ்வுகள் சோபை இழந்தும், நடைபெறாத நிலமையும் காணப்பட்டது.

எனினும் நாட்டில் நிலவும் அமைதியான சூழ்நிலை காரணமாக கிழக்கின் பல்வேறு முஸ்லிம் பிரதேசங்களிலும் சிறப்பான பொது நிகழ்வாக இப்தார் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

குறிப்பாக இவ்வாறு நடைபெறும் இப்தார் நிகழ்வுகள் மாற்றுமத சகோதரர்களினதும் பங்குபற்றுதல்களுடன் இனநல்லிணக்க இப்தார் நிகழ்வுகளாகவும் இடம்பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அரச அலுவலகங்கள், வங்கிகள் முதலானவற்றில் ஏற்பாடு செய்யப்படும் இப்தார் நிகழ்வுகள் அவற்றில் கடமையாற்றும் சகோதர இன உத்தியோகத்தர்கள், ஊழியர்களின் பங்குபற்றுதல் மட்டுமன்றி, பங்களிப்புகளுடனும் இடம்பெற்று வருவது சிறப்பம்சமாக அமைந்துள்ளது.
மேலும், இப்தார் நிகழ்வுகளில் நிகழ்த்தப்படும் சிறப்பு பயான்களில் இன நல்லிணக்கம், நல்லுறவு தொடர்பிலும், ஈகையின் சிறப்புக்கள் தொடர்பிலும் வலியுறுத்தப்பட்டுவரும் அதேவேளை, நாட்டுக்கும், நாட்டு மக்களின் நல்வாழ்வுக்குமான விசேட துஆபிரார்த்தனைகளும் இடம்பெற்றுவருகின்றன.

இதேவேளை சம்மாந்துறை ஹைர் பள்ளிவாசலில், அருகிலுள்ள வீரமுனை தமிழ், கிராம இளைஞர்கள், பொது மக்கள் கலந்து கொண்ட எடுத்துக்காட்டான இப்தார் நிகழ்வு ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

ஏறாவூரில் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட்டின் ஏற்பாட்டில் மாபெரும் இப்தார் நிகழ்வு ஒன்று நடைபெற்றுள்ளது. அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் நேரில் பிரசன்னமாக விருந்து இந்த இப்தார் நிகழ்வை நடத்தினார். பெருந்தொகையானோர் இந்த இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சிறப்புற நடைபெறும் இப்தார் நிகழ்வு

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)