
posted 17th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
சடலமொன்று மீட்பு
திருகோணமலை அலஸ்தோட்டம் கடற்கரையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டிலிருந்து நேற்று முன்தினம் மாலை அவர் சென்ற நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் சாம்பல்தீவு - சல்லி வாட்டு இலக்கம் 02 ஐ சேர்ந்த ராஜலிங்கம் பிரபாகரன் (38 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
அலஸ்தோட்டம் கடற்கரையில் மீக்கப்பட்ட சடலத்தை திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் பார்வையிட்டதையடுத்து பிரேத பரிசோதனைக்காக பொது வைத்தியசாலைக்கு சடலத்தை கொண்டு செல்லுமாறும் பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)