கிழக்கில் கடையடைப்பு, ஹர்த்தால்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

கிழக்கில் கடையடைப்பு, ஹர்த்தால்

ஏழு தமிழ்க் கட்சிகள், பொது அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், கூட்டாக வடக்கு கிழக்கில் ஏற்பாடு செய்த கடையடைப்பு, ஹர்த்தால் கிழக்கிலும் இடம்பெற்றது.

கிழக்கின் திருமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கடையடைப்பு, ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டதால் இன்று மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம், வடக்கு கிழக்கில் சிங்கள பௌத்த மயமாக்கல் ஆகிய முக்கிய விடங்களுட்பட தமிழ் பேசும் மக்கள் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகளுக்கும் எதிர்ப்புத் தெரிவித்து இந்த கடையடைப்பு, ஹர்த்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எனினும் வங்கிகள், தபாலகங்கள், அரச அலுவலகங்கள் பல பிரதேசங்களிலும் வழமைபோல் இயங்கியதையும், மட்டுப்படுத்தப்பட்ட அளவில் போக்குவரத்து பஸ் சேவைகள் இடம்பெற்றமையையும் அவதானிக்க முடிந்தது.

அதேவேளை அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம் பிரதேசங்கள் உட்பட சில தமிழ்ப் பிரதேசங்களிலும் குறித்த கடையடைப்பு, ஹர்த்தாலில் பங்கு கொள்வதில் மக்கள் ஆர்வம் காட்டாத நிலமையும் காணப்பட்டது.

சில பிரதேசங்களில் கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகளும் இடம்பெற்றன. அவ்வாறு சில கடைகள் மூடப்பட்டும், சில கடைகள் வழமைபோல் திறக்கப்பட்டும் காணப்பட்டன மாவட்டத்தின் முக்கிய வர்த்தக நகரமான கல்முனை மாநகரில் பொதுச் சந்தை வழமை போல் இயங்கியதுடன், பெரும்பாலான வியாபார நிலையங்கள் திறந்தே காணப்பட்டன.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்ட ஹர்த்தால் முழுமையான வெற்றிகானாது பிசுபிசுத்துப் போனமைக்கான காரணத்தை தமிழ் கட்சிகளும், ஆதரவு தெரிவித்த முஸ்லிம் கட்சிகளும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் பிரிமுகர் ஒருவர் கருத்து வெளியிட்டார்.

கிழக்கில் கடையடைப்பு, ஹர்த்தால்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)