
posted 6th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கிரிக்கெட் அபிவிருத்தி குழுத்தலைவர்
இலங்கை கிரிக்கெட் சபையின் கிழக்கு மாகாணப் பிரிவுக்கான கிரிக்கெட் அபிவிருத்திக் குழுவின் தலைவராக சம்மாந்துறையைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.எல். றியாஸ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள இலங்கை கிரிக்கெட் சபையின், கிழக்கு மாகாண காரியாலயத்தில் இடம்பெற்ற நிருவாகிகள் தெரிவின் போது மேற்படி தெரிவு இடம்பெற்றது.
கல்முனை ஹொலிபீல்ட் விளையாட்டுக்கழகத்தின் ஸ்தாபகச் செயலாளரான பேராசிரியர் றியாஸ், அம்பாறை மாவட்ட கிரிக்கெட் சம்மேளனத்தை ஸ்தாபிப்பதில் முக்கிய பங்கு வகித்ததுடன் தற்சமயம் இந்த மாவட்ட சம்மேளனத்தின் உப தலைவராகவுமிருந்து கிரிக்கெட் அபிவிருத்திக்காகப் பெரும் பங்காற்றியும் வருகின்றார்.
1987 முதல் 2022 ஆம் ஆண்டு வரை பாடசாலை மற்றும் கழக மட்டங்களில் கிரிக்கெட் விளையாட்டு மற்றும் கிரிக்கெட் அபிவிருத்தி நடவடிக்கைகளில் பங்கு கொண்ட இவர், 2003 முதல் இன்று வரை கிரிக்கெட் நிருவாகியாகவும் இருந்து வருகின்றார்.
கல்முனையைப் பிறப்பிடமாகவும், சம்மாந்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட பேராசிரியர் றியாஸ், தற்சமயம் கிரிக்கெட் அபிவிருத்திக் குழுவின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)