
posted 21st April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
கதவடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாண வணிக கழகம் பூரண ஆதரவு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் அழைப்பில் எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெற உள்ள வடக்கு கிழக்கு தழுவிய கடை அடைப்பு போராட்டத்திற்கு யாழ்ப்பாண வணிகர் கழகமும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.
வியாழன் (20) தினம் யாழ்ப்பாண வணிகக் கழகத்திற்கும் தமிழ் கட்சிகளின் பிரதிகளுக்கும் இடையிலான சந்திப்பு வணிக கழகத்தில் இடம் பெற்றது. இதன்போது யாழ்ப்பாண வணிகர் கழகம் அனைத்து கடைகளையும் பூட்டி பூரண ஆதரவு வழங்குவதாக தெரிவித்தது.
சந்திப்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் மாவை சேனாதிராஜா தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சுரேஷ் பிரேமச்சந்திரன் மற்றும் பா. கஜதீபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)