
posted 6th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
எடுத்துச் செல்லப்பட்ட புனித தீர்த்தம்
திருக்கோணேஸ்வர திருத்தலத்தில் ஆரம்பமாக உள்ள மஹோட்சவத் திருவிழாவிற்கு மன்னார் பாடல் தளமான திருக்கேதீச்சர பாலாவியிலிருந்து புனித தீர்த்தம் புதன்கிழமை (5) எடுத்துச் செல்லப்பட்டு ஆலயத்தில் கையளிக்கப்பட்டது.
செவ்வாய் கிழமை (4) பாலாவியின் புனித நீர் எடுத்து சிறப்புப் பூஜை நடைபெற்று அதிகாலை திருவனந்தலைத் தொடர்ந்து திருக்கேதீச்சர ஆலய நிர்வாகத்தினரால் திருகோணேச்சர ஆலயம் நோக்கி தீர்த்தம் எடுத்துச் சென்று கையளிக்கப்பட்டது..
இதேபோல் திருக்கேதீச்சர ஆலய மகோற்சவ திருவிழாவிற்கு கோணேஸ்வர ஆலயத்தில் இருந்து புனித பாபநாசம் தீர்த்த கொண்டு வருகின்ற நிகழ்வும் சிறப்பாக நடைபெற உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)