ஊடகவியலாளர்களுக்கு கௌரவம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஊடகவியலாளர்களுக்கு கௌரவம்

சாய்ந்தமருதைச் சேர்ந்த பிரபல ஜவுளி மற்றும் வர்த்தக நிறுவனம் ஒன்று அம்பாறை மாவட்டத்திலுள்ள தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்களை கௌரவித்து தனியாக நோன்ப திறக்கும் இன ஐக்கிய இப்தார் நிகழ்வு ஒன்றை ஏற்பாடு செய்து நடத்தியது.

கிழக்கிலங்கையின் பல்வேறு பிரதேசங்களிலும் முபாறக் டெக்ஸ் எனும் வர்த்தக நாமத்துடன் பிரபலமான கிளைகளைக் கொண்ட மேற்படி நிறுவனத்தின் தவிசாளர் அல்-ஹாஜ் எம்.எஸ்.எம். முபாறக் அவர்களின் எண்ணக்கருவுக்கு அமைய, ஊடகவியலாளர்களைக் கௌரவித்து மேற்படி இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

சாய்ந்தமருது சீபிறிஜ் வரவேற்பு மண்டபத்தில் தவிசாளர் அல் ஹாஜ் முபாறக் தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் நிகழ்;வில், முப்பதுக்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம் ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் ஆரம்பத்தில் மௌலவி. ஏ.பி.எம். சிம்லி (நஹ்லி), அஷ்ஷெய்க் றஷீட் மௌலவி ஆகியோர்கள் சன்மார்க்க செற்பொழிவும், விஷேட துஆ பிரார்த்தனையும் நடத்தினர்.

மேலும் தமது வர்த்தக நிறுவனம் ஆரம்பித்த காலம் முதல் ஊடகங்கள் அளித்த ஆதரவே தமது நிறுவனம் அபரிமித வளர்ச்சி காணக் காரணமென நன்றிப்பெருக்குடன் உரையாற்றிய அல்-ஹாஜ் முபாறக்,

மறைந்த ஒலிபரப்பாளர் மர்ஹ{ம் ஏ.ஆர்.எம். ஜிப்ரி மற்றும் பிறை எப்.எம் பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம் ஆகியோருக்கு நோன்ப பெருநாளுக்காக இரு காசோலைகளை வழங்கியதுடன், நிகழ்வில் கலந்து கொண்ட சகல தமிழ், முஸ்லிம் ஊடகலியலாளர்களுக்கும் தமது முபாறக் இமேஜ் (ஆண்களுக்கான ஆடையகம்) சார்பில் புத்தாடைகள் கொண்ட பெருநாள் பொதிகளையும் வழங்கினார்.

முபாறக் நிறுவன தவிசாளர் அல்-ஹாஜ் முபாறக் அவர்களின் இந்த முன்மாதிரியான செயற்பாடு தொடர்பில் ஊடகவியலளர்கள் பெரும் பாராட்;டும் நன்றியும் தெரிவித்தனர்.

தவிரவும் சாய்ந்தமருதில் புதிதாக தவிசாளர் அல்-ஹாஜ் முபாறக்கினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆடையகமான முபாறக் இமேஜ் நிறுவனத்தின் திறப்புவிழா கடந்த சில தினங்களுக்கு முன் வெகு கோலாகலமாக இடம் பெற்றமையும் குறிப்பிடத்தக்கது.

தவிசாளர் முபாறக்கின் தந்தை அல்-ஹாஜ் மீராசாகிபு இந்த ஆண்களுக்கான ஆடையகத்தை வைபவரீதியாக திறந்து வைத்தார்.

ஊடகவியலாளர்களுக்கு கௌரவம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)