
posted 25th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
உலக சாதனை
அம்பாறை மாவட்டத்தின் கல்முனைப் பிராந்தியத்தில் உள்ள மிகவும் பின்தங்கிய தனிமைப் படுத்தப்பட்டுள்ள துரைவந்திமேடு எனும் குக்கிராமத்தைச் சேர்ந்த ஜனாசுகிர்தன் கிரண்யாஸ்ரீ எனும் நான்கு வயதுசிறுமி இரண்டு உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.
இவர் தனது இரண்டு கைகளாலும் ஏ-இசற் வரை குறுகிய நேரத்தில் எழுதி உலக சாதனையை படைத்துள்ளார். அவர் 2.38 நிமிடங்களில் இரு கரங்களினாலும் ஏ - இசற் வரை எழுதி இச் சாதனையை படைத்துள்ளார். அவரின் சாதனையை அவரே முறியடித்து 2 உலக சாதனைகளை படைத்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
செல்வி. கிரண்யாசிறி முதலாவது சாதனை ஏ - இசற் =3.30 நிமிடங்களில் நிகழ்த்தியிருந்தார். தற்போது இரண்டாவது சாதனைஏ-இசற் = 2.38 நிமிடங்களில் நிகழ்த்தியுள்ளார்.
இவை இந்தியாவை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் இரண்டு உலக சாதனை நிறுவனங்கள் மூலம் நிகழ்த்தப்பட்டது . அதற்கான சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.
குடும்பத்தில் ஒரே மகளான இவரின் தந்தை கலைஞராவார். தாய் ஒரு தாதிய உத்தியோகத்தராவார். அவரின் தந்தை உலகில் மிகச் சிறிய சிவலிங்கத்தை மரத்தில் செதுக்கி உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)