இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகள்  - தொடர்பு கொள்ள தொ. இல. உண்டு

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகள் - தொடர்பு கொள்ள தொ. இல. உண்டு

மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 26.04.2023 ம் திகதி மன்னார் மாவட்ட செயலக ஏற்பாட்டில் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் நடத்தப்பட இருப்பதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிக்கையில்;

இந் நிகழ்வின் மூலம் மன்னார் மாவட்ட இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்தை மேம்படுத்தும் செயற்பாடுகள் பல முன்னெடுக்கப்படவுள்ளன.

அந்த வகையில் எமது மாவட்டத்தில் பாடசாலைக் கல்வியை நிறைவு செய்தவர்கள் மற்றும் பாடசாலையிலிருந்து இடைவிலகியவர்கள் தமது திறன்களை அடையாளம் கண்டு அதனூடாக தமக்கு பொருத்தமான செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான முன்னெடுப்புக்கள் நடைபெறவுள்ளன.

இத் தொழிற்சந்தையின் முக்கிய விடயமாக பயிற்றுவிக்கப்பட்ட வளவாளர்கள் ஊடாக திறன்கள் அடையாளம் காணப்பட்டு அதற்கான வழிகாட்டலினூடாக ஒவ்வொருவரும் உள்நாட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களை பெற்றுக்கொள்வதற்கான அரிய சந்தர்ப்பமாக இந் நிகழ்வு அமையவுள்ளது என்றும், அது மட்டுமன்றி, உயர் கல்வியினூடாக தமது எதிர்காலத்தை வளப்படுத்துவதற்கும் எதிர்பார்த்துள்ள இளைஞர் யுவதிகள் தமது உயர் கல்வியை பெற்றுக்கொள்வதற்கான தளமாகவும் இது அமையவுள்ளது.

இந்நிகழ்வில் ஏறத்தாழ 40ற்கும் அதிகமான உள்நாட்டு வெளிநாட்டு மற்றும் உயர்கல்வி வழங்கும் நிறுவனங்கள், பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் , வியாபார ஊக்குவிப்பு செயற்பாடுகளுடன் தொடர்புடைய நிறுவனங்கள் என பல தரப்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ளவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்தாக தெரிவித்தார்.

மேலும் அரச அதிபர் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டம் மற்றும் வெளிமாவட்ட நிறுவனங்களினூடாக ஏறத்தாழ 500 க்கும் மேற்பட்ட வெற்றிடங்களுக்கான வேலை வாய்ப்புக்களும், வெளிநாட்டு வேலை தொடர்பான வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அடங்கலான ஏனைய வெளிநாட்டு முகர்வர்களின் 1000 க்கும் அதிகமான வேலை வாய்ப்புக்களும் காணப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.

இவை தவிர வியாபாரத்தினூடாக தம்மை நிலை நிறுத்தி கொள்ள எதிர்பார்க்கும் இளைஞர் யுவதிகளுக்கான வழிகாட்டல்கள் போன்றனவும் கிடைக்கப்பெறவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது எனவும் தெரிவித்தார்.

எனவே, அனைத்து இளைஞர் யுவதிகள் மற்றும் வேலைவாய்ப்பு உயர்கல்விக்கான வாய்ப்பை எதிர்பார்த்துள்ள அனைவரையும் இந்நிகழ்வினை தவறவிடாது பயன்படுத்திக் கொள்ளுமாறு அரச அதிபர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தொடர்புகொள்ள விரும்புவோர் 0770743231 அல்லது 0772092006 தொலைபேசி இலக்கத்துடன் கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகள்  - தொடர்பு கொள்ள தொ. இல. உண்டு

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)