
posted 7th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
இலவச உர விநியோகம்
காரைதீவு கமநல சேவைகள் மத்திய நிலைய பிரிவுக்குட்பட்ட விவசாயக்கண்டங்களின் விவசாயிகளுக்கு அரசாங்கத்தினால் இலவசமாக வழங்கப்படும் ரி.எஸ்.பி. எனப்படும் அடிக்கட்டு உர விநியோகம் கிரமமாக இடம்பெற்று வருகின்றது.
காரைதீவு கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோத்தர் எம். சிதம்பரநாதனின் நெறிப்படுத்தலிலும், நேரடி கண்காணிப்பிலும் இந்த இலவச உர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டு சீராக இடம்பெற்று வருகின்றது.
காரைதீவு கமநல Nசுவைகள் மத்திய நிலையப் பிரிவிலுள்ள நான்கு விவசாயக் கண்டங்களின் நெல் விவசாயிகள் இந்த இலவச ரி.எஸ்.பி உரத்தைப் பெற்றுப் பயனடையவுள்ளதாகவும், 472.56 ஹெக்டயர் நெற் காணிகளுக்கு இந்த உரம் பயன்படுத்தப்படவுள்ளதாகவும் சிதம்பரநாதன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் விதைப்பு வேலைகள் தற்சமயம் ஆரம்பமாகியுள்ளதால் மேற்படி இலவச உரமான ரி.எஸ்.பியின் அவசியம் கருதி, இந்த உரத்தைப் பெற்றுக்கொள்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோத்தர் சிதம்பரநாதன் தலைமையில் காரைதீவு கமநல சேவைகள் மத்திய நிலையத்தில் குறித்த இலவச உர விநியோக ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராசன் உட்பட விவசாயப் போதனாசிரியர், கமக்காரர் அமைப்புக்களின் பிரதி நிதிகள், முக்கியஸ்த்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தவிரவும், சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் (யூஎஸ்.எய்ட்) நிதி உதவியுடன் 36000 மெட்ரிக்தொன் ரி.எஸ்.பி. உரம் இலங்கைக்கு அண்மையில் கையளிக்கப்பட்டது.
இலங்கையின் 25 மாவட்டங்களிலுமுள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான நெல் விவசாயிகளுக்கு இலவசமாக இந்த உரம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)