இலங்கையில் நோன்புப் பெருநாள்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இலங்கையில் நோன்புப் பெருநாள்

புனித நோன்புப் பெருநாள் பண்டிகையினை இலங்கையில் கொண்டாடுவதற்கு முஸ்லிம் மக்கள் தயாராகி வருகின்றனர்.

குறிப்பாக கிழக்கிலங்கையின் முஸ்லிம் பிரதேசங்களில் பெருநாள் பண்டிகைக்கான பல்வேறு நடவடிக்கைகளும் களைகட்டத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக ஜவுளிக் கடைகள் பல பிரதேசங்களிலும் தினமும் புதிய உடுதுணிகள் வங்குவதற்காக நள்ளிரவு வரை முஸ்லிம் மக்களால் நிரம்பி வழிந்தவண்ணமுள்ளன.

இதேவேளை இம்முறை முஸ்லிம் பிரதேசங்களில் பெருநாளிற்கான ஜவுளி மற்றும் பொருட்களை வெளிமாவட்டங்களிலிருந்து வரும் பெருந்தொகையான அங்காடி வியாபாரிகள் இரவு பகலாக முன்னெடுத்து வருவதால் அத்தகைய அங்காடி வியாபாரமும் பெரும் களைகட்டிவருகின்றது.

இதேவேளை நாளை 22 ஆம் திகதி சனிக்கிழமை இலங்கையில் நோன்புப் பெருநாள் பண்டிகை கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் நாளை வெள்ளிக்கிழமை (21) மாலை கொழும்பு பெரிய பள்ளிவாசலில் பிறைக் குழுவினர் கூடி பெருநாள் தொடர்பான இறுதி முடிவினை எடுக்கவுள்ளனர்.

மேலும், இம்முறை நோன்புப் பெருநாள் தொழுகையினை பள்ளிவாசல்களிலும் திறந்த திடல்களிலும் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

கடந்த சில வருடங்களாக இத்தகைய பெருநாள் பண்டிகைககள் விமர்சையாக கொண்டாடப்படாத நிலையில் இம்முறை வெகு விமர்சையாக பெருநாள் பண்டிகை கொண்டாடப்படவிருக்கின்றது.

மேலும், சவூதி அரேபியாவில் (மக்காவில்) இன்று (20) வியாழக்கிழமை மாலை பிறை தென்பட்டதால் நாளை (21) வெள்ளிக்கிழமை அங்கு புனித நோன்புப் பெருநாள் கொண்டாடப்படவிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் நோன்புப் பெருநாள்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)