இ.போ.ச பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

இ.போ.ச பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் இன்று (25) காலை இ.போ.ச பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து மீது கல் வீசப்பட்டதில் பேருந்தின் சாரதி காயமடைந்துள்ளதாக முல்லைத்தீவு பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (25) காலை முல்லைத்தீவில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி ஏ - 30 வீதியூடாக பேரூந்து சென்று கொண்டிருந்த போது, செல்வபுரம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் கல் வீசப்பட்டதாக பேருந்தின் சாரதி பொலிஸாரிடம் தெரிவித்தார்.

கல் வீச்சு காரணமாக பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத போதிலும் சாரதிக்கு மாத்திரம் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பொலிசாரின் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன.

வடக்கு - கிழக்கு மாகாணங்களில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், சேவையில் ஈடுபட்ட பேருந்து மீது கல்வீசப்பட்டுள்ளது.

இ.போ.ச பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)