
posted 11th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ஆலயத்தில் திருட்டு சம்பவம்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள அரசடி சந்திப் பிள்ளையார் ஆலயத்தில் திருட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
ஆலய குருக்களின் கையடக்க தொலைபேசி, 35 ஆயிரம் ரூபா பணம் மற்றும் திறப்புக் கோர்வை என்பனவற்றை இளைஞன் ஒருவர் திருடிச் சென்றுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த ஆலயத்தில் வழமைபோன்று ஆலய குருக்கள் பூசை செய்வதற்காக சம்பவ தினமான அன்று காலை 6 மணிக்கு சென்று தனது கையடக்கத் தொலைபேசி மற்றும் தாம் வைத்திருந்த 35 ஆயிரம் ரூபா பணம் ஆலய சாவிக்கோர்வை கியூ.ஆர். அட்டை, அடையாள அட்டை, சாரதி அனுமதிப்பத்திரம் என்பற்றை வைத்துவிட்டு பூசை வழிபாட்டுக்குச் சென்றுள்ளார்.
பூசையை முடித்துவிட்டு 7 மணியளவில் அறைக்குச் சென்றபோது அங்கு வைத்திருந்த பொருட்கள் திருட்டுப் போயுள்ளது.
இதனையடுத்து ஆலயத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வி கமெராவை பார்த்தபோது அதில் இளைஞர் ஒருவர் முகத்தை மறைக்க முகக்கவசம் அணிந்தவாறு அறையினுள் சென்று அங்கிருந்த பொருட்களை திருடிக்கொண்டு செல்வது பதிவாகியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)