ஆசிரியர்கள் இடமாற்றம்

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

ஆசிரியர்கள் இடமாற்றம்

கல்முனை கல்வி வலயத்தில் மிக நீண்டகாலமாக ஒரே பாடசாலையில் கடமையாற்றி வந்த ஆசிரியர்களுக்கு தற்போழுது இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளரால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த இடமாற்றத்திட்டம் பலராலும் வரவேற்கப்படுகின்றது. இந்த நிலையில் கல்முனை கல்வி வலயத்தில் நீண்ட காலமாக ஒரே பாடசாலையில் பத்து வருடங்களுக்கு மேல் சேவையாற்றிய ஆசிரியர்களுக்கான இடமாற்றம் மேற்கொள்ளப்படாதிருந்தமை கவலை அளித்தபோதிலும் அதனை துணிச்சலோடு பொறுப்பேற்று அந்த இடமாற்றத்தை புதிய வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் வெற்றிகரமாக செய்து முடித்ததையிட்டு கல்முனை கல்வி வலய அதிபர் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

புதிதாகப் புனரமைக்கப்பட்ட கல்முனை கல்வி வலய அதிபர் சங்கத்தின் தலைவர் இஸட். அஹமட் தெரிவிக்கையில்,

கடந்த பத்து வருடங்களுக்கு மேல் ஒரே பாடசாலையில் 170 இற்கு மேற்பட்ட ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படாமல் தொடர்ந்தும் அப் பாடசாலையிலேயே சேவையாற்றி இருந்தபோதும், கல்வி அமைச்சின் 20 - 2007ஆம் இலக்க தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக மிகவும் துணிச்சலோடு நீண்ட காலமாக மேற்கொள்ளப்படாத அந்த இடமாற்றத்தை புதிதாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக கடமையேற்ற எம்.எஸ். சஹ்துல் நஜீம் அதனை மிக வெற்றிகரமாக எதிர்கொண்டு முடித்தமையானது கல்முனை கல்வி வலயத்தின் கல்வி வளர்சியில் அவர் ஆற்றிய மகத்தான சேவையாகும். இது பாடசாலை வளர்ச்சியிலும் பொதுவாக கல்முனை கல்வி வலயத்தின் கல்வி வளர்ச்சிக்கும் முக்கியமான அம்சமாக உள்ளது.

எனவே, ஆசிரிய இடமாற்றங்கள் வருடா வருடம் இடம் பெறவேண்டும். இதன் ஊடாகவே பாடசாலைகளின் தேவையான ஆசிரியர் பங்கீடு சீராகச் செய்ய முடியும். அதேபோன்று ஒரு ஆரோக்கியமான சிறப்பான கல்வி வளர்ச்சிக்கு இது துணைபுரியும் என்றார்.

ஆசிரியர்கள் இடமாற்றம்

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)