
posted 12th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல்
இந்திய இராணுவத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 30 நாட்கள் உணவை ஒறுத்து பேராாடி உயிர் நீத்த அன்னை பூபதியின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று புதன்யாழ். பல்கலைக்கழகத்தில் கடைப்பிடிக்கப்பட்டது.
யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற நினைவேந்தலில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் அ. விஜயகுமார், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் சி. ஜெல்சின், விஞ்ஞானபீட மாணவர் ஒன்றியத் தலைவர் அபிரக்சன், மற்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர் சங்கத் தலைவர் த. சிவரூபன் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் மாணவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)