
posted 17th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
அன்னை பூபதி நினைவேந்தல்
தியாக தீபம் அன்னை பூபதி அவர்களின் நினைவு வணக்க நிகழ்வை எதிர்வரும் புதன் கிழமை 19ஆம் திகதி நடத்துவதற்கு வரலாற்றில் முதன்முதலாக ஒரு பொதுக் கட்டமைப்பு மட்டக்களப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த பொதுக்கட்டமைப்பில்,
க. பிரபாகரன் - அன்னை பூபதியுன் புதல்வர்
திருமதி லோ. சாந்தி - அன்னைபூபதியின் புதல்வி
யோ. அரவிந்தன் - அன்னைபூபதியின் பேரன்
த. முரசொலிமாறன் குருக்கள்
வண. பிதா ஜோசப்மேரி அடிகளார்
சபா. சிவயோகநாதன் - சிவில் சமூக செயல்பாட்டாளர்
இ . செல்வகுமார் - சிவில் சமூக செயல்பாட்டாளர்
ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இவர்களின் ஏற்பாட்டில் இந்த வருடம் அன்னை பூபதியின் 35 ஆவது ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு உணர்வுபூர்வமாக இடம்பெறவுள்ளது.
19ஆம் திகதி மு.ப. 09 மணிக்கு மாமாங்கப்பிள்ளையார் ஆலயத்தில் பூசை வழிபாடு, திதி ஆராதனைகளும் அதனை தொடர்ந்து அன்னதானமும் பின்னர் பி . ப 04 மணிக்கு திருச்செந்தூர் முருகன் ஆலயத்தில் இருந்து நாவலடி அன்னை பூபதியின் கல்லறைக்குச் சென்று பி . ப. 05 மணிக்கு நினைவு வணக்கம் செலுத்தப்படும் என “தியாக தீபம் அன்னைபூபதி நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு” அறிவித்துள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)