
posted 13th April 2023
Birthday Wishes

பிறந்ததன் பலனைத் தரணியில் பதித்து வெற்றிவாகை சூடித் திகழும் உங்களுக்கு, மேலும் வாழ்க்கையின் உச்சியினில் கால்த்தடம் பதிக்க வாழ்த்துகின்றோம் தேனாரத்திலிருந்து. Many more happy returns on your Birthday
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் இன்று (13) தனது 63 ஆவது அகவையில் காலடியெடுத்து வைக்கின்றார்.
கல்வி பாரம்பரியத்தை பின்புலமாகக் கொண்ட தலைவர் ரவூப் ஹக்கீம் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் விவகாரங்களில் சமகாலத்தில் பாராட்டப்படுவதாக இருந்தாலும், விமர்சிப்பதாக இருந்தாலும் அதிகமாக உச்சரிக்கப்படும் நாமமாக ரவூப் ஹக்கீம் திகழ்கின்றார் என்பது யதார்த்தமாகும்.
முஸ்லிம் அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகத் திகழும் ரவூப் ஹக்கீம் தன்னகத்தே பல ஆளுமைப் பண்புகளை கொண்டிருப்பதை காண முடிகின்றது. மும்மொழிகளிலும் பேசக்கூடிய ஆற்றல் மிக்க ரவூப் ஹக்கீம் இலங்கை திருநாட்டின் எப்பாகத்திலும் உள்ள மக்களின் பேச்சு வழக்கில் அந்த பிரதேசத்து மக்களைப் போல் மொழியைக் கையாலும் தன்மை கொண்டவர். சர்வதேச ரீதியாக நன்கறியப்பட்ட அரசியல் தலைவரான இவர் கவியேற்றும் வல்லமையும், கவிபாடும் வல்லமையும் கொண்ட ஆளுமையாகவும் திகழ்கின்றார். அதேபோல் அரசியல்வாதியாக அறியப்பட்ட ரவூக் ஹக்கீம் சிறந்த பேச்சாளராகவும், எழுத்தாளராகவும் திகழ்கின்றார்.
சட்டத்தரணியாக நீண்டகாலம் பணி செய்வதற்கான வாய்ப்புக்கள் இருந்தும் அரசியலிற்குள் நுழைந்தபோதிலும் அவர் திறமையான சட்டத்தரணி என்பதற்கும் பல சான்றுகள் கொண்டவராவார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமுதுமாணி கற்கையை மேற்கொண்டு தொடர்ந்து சட்ட முதுமாணியாகவும் வெளிவந்திருக்கின்றார்.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரான மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் பாசறையில் வளர்ந்து வந்த அவர் அஷ்ரபின் மறைவிற்குப் பின்னர். முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடாத்தும் அரசியல் நிலைமைக்கு உள்ளாக்கப்பட்டார்.
இன்று 63 ஆவது அகவையில் காலடி வைக்கும் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு பல்வேறு தரப்பினரும் குறிப்பாக கட்சிப் போராளிகளும், முக்கியஸ்த்தர்களும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
நமது தேனாரம் சார்பிலும் தலைவர் ஹக்கீமிற்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதில் மகிழ்வடைகின்றோம்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)