
posted 6th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
52ஆவது வீரர்கள் ஞாபகார்த்த தினம்
மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் 52ஆவது ஏப்ரல் வீரர்கள் ஞாபகார்த்த தினம் நடைபெற்றுள்ளது.
இலங்கையில் 1971 ஏப்ரல் 5ஆம் திகதி மக்கள் விடுதலை முன்னணியின் போராட்டம் ஆரம்பித்த நிலையில் அதில் உயிரிழந்தவர்களை நினைவு கூரும் வகையில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிகழ்வு நேற்று (05) யாழ். மாவட்ட மக்கள் விடுதலை முன்னணியின் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆரம்பத்தில், கிளர்ச்சியில் உயிரிழந்த வீரர்களுக்கான நினைவேந்தல் இடம்பெற்றதுடன் கட்சி அமைப்பாளர்களின் உரையும் இடம்பெற்றது.
இதில் கட்சி அமைப்பாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)