
posted 3rd April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
விழிப்புணர்வாக பெண்களின் மரபுசார் உணவு கொண்டாட்டம்
முன்னோர்கள் இன்றைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு மரபுசார் உணவுகளே அடித்தளமாக இருந்தது. ஆனால், இன்று நாங்கள் காலனித்துவ பொருளாதாரத்திற்குள் சிக்கி எமது ஆரோக்கியமான வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருப்பதால் விழிப்புணர்வாக பெண்களின் மரபுசார் உணவு கொண்டாட்டம் மன்னாரில் இடம்பெற்றது.
மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 01.04.2023 அன்று சனிக்கிழமை காலை 10.00 மணி தொடக்கம் இலுப்பைக்கடவை தமிழ் வித்தியாலயத்தில் பெண்களின் மரபுசார் உணவு கொண்டாட்டம் குறித்த நிகழ்வு கொண்டாடப்பட்டது.
இந் நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், மாகாண உதவி விவசாயப் பணிப்பாளர், மாதர் அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் பொது மக்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பாலியாறு, இலுப்பைக்கடவை, பறங்கிகமம், கள்ளியடி, சவிரிகுளம், இத்திக்கண்டல் மற்றும் வேட்டையான்முறிப்பு ஆகிய மாதர் சங்கங்கள் தங்களது மரபுசார் உணவுப் பொருட்களை பார்வைக்கு வைத்திருந்ததுடன் அவர்களது மரபுசார் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.
நடைபெற்ற மரபுசார் உணவு கொண்டாட்டமானது எங்களால் மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட உணவுகளின் மகத்துவத்தை உணர்த்துவதும், அவற்றை எதிர்கால சந்ததிக்கு அறிமுகப்படுத்தவும், ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டே முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
எங்களது முன்னோர்கள் இன்றைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு மரபுசார் உணவுகளே அடித்தளமாக இருந்தது. ஆனால், இன்று நாங்கள் காலனித்துவ பொருளாதாரத்திற்குள் சிக்கி எமது ஆரோக்கியமான வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்.
முன்னோர்கள் உண்டு வந்த பாரம்பரிய உணவுகளை மறந்துவிட்டு கோடி கோடியாக இப்பொழுது மருத்துவமனைகளுக்கு மருந்துகளுக்கும் செலவழித்துக் கொண்டிருக்கிறோம்.
எனவே நலமான ஆரோக்கியமான எதிர்காலம் ஒன்றிற்காக நாம் நம் மரபு சார்ந்த உணவுகளைக் கொண்டாடவும், அவற்றை மீண்டும் பழக்கத்திற்கு கொண்டு வரவும் தேவைப்பாடு உடையவர்களாக இருக்கிறோம் என்பதை உணர்த்துவதே மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மரபுசார் கொண்டாட்டம் ஆகும் என மன்னார் மாதர் ஒன்றியத் தலைவி மகாலெட்சுமி தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)