
posted 16th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
விபத்தில் உயிரிழப்பு
கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதியில், நிந்தவூர் மாட்டுப்பளை பிரதேசத்தில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் இரு பிள்ளைகளின் தந்தையான இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சனிக்கிழமை (15) அதிகாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் சாய்ந்தமருதைச் சேர்ந்த ஜமால்தீன் ஹாருன் எனும் 41 வயது நபரே உயிரிழந்துள்ளார்.
கட்டார் நாட்டில் தொழில் வாய்ப்பினிமித்தம் சென்று கடந்த வாரமே நாடுதிரும்பிய மேற்படி இளைஞர், சாய்ந்தமருதிலிருந்து விபத்து இடம்பெற்ற மாட்டுப்பளை பகுதியூடாக மோட்டார் சைக்கிளில் வேகமாகப் பயணித்துக் கொண்டிருந்த நிலையில், குறித்த பிரதான வீதியூடாகச் சென்று கொண்டிருந்த மாட்டு வாண்டியில் மோதுண்டு ஸ்தலத்திலேயே மரணமடைந்துததுடன், மாட்டு வண்டியும் சேத முற்றுள்ளது. நிந்தவூர் பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.
மரணித்த நபர் செலுத்திய மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து மாட்டு வண்டியுடன் மோதி விபத்து நேர்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தவிரவும் அண்மைக்காலமாக குறித்த மாட்டுப்பளை பிரதேச பிரதான வீதியில், இத்தகைய வீதிவிபத்துகள் அடிக்கடி நிகழ்ந்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருவதாகப் பொது மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)