
posted 20th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
ரமழான் தந்த படிப்பினைகளை உணர்ந்து செயற்படுவோம்
“ஈகையின் சிறப்பை எடுத்தியம்பும் புனித ரமழான் மாதம் எம்மை விட்டுப்பிரிந்து செல்லும் நிலையில் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் சகல முஸ்லிம்களுக்கும் பெருநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் பேருவகையடைகின்றேன்.” இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின், உயர் பீட உறுப்பினரும், அக்கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பணிப்பாளரும், சம்மாந்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான ஐ.எல்.எம். மாஹிர் விடுத்துள்ள நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் பின்வருமாறு தெரிவித்துள்ளார்.
“ரமழான் மாதம் முழுவதும் பசித் திருந்தும், விழித்திருந்தும், நல்லமல்கள் பல புரிந்து நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் மகிழ்ச்சிகரமான இந்த நந்நாளில் புனித ரமழான் நமக்கு உணர்த்திய, கற்றுத்தந்த பாடங்களை என்றும் நினைவில் கொண்டவர்களாக நம் எதிர்கால செயற்பாடுகள் அமைய வேண்டும்.
குறிப்பாக பசி, பட்டினி, வறுமையின் கோரப்பிடிக்குள் சிக்கித் தவிக்கும் நம் சகோதரர்களின் வாழ்வில் மறுமலர்ச்சிகள் ஏற்பட உதவுபவர்களாகவும், அவர்களது துயர் நீக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களாகவும் நாம் செயற்பட முன்வரவேண்டும்.
மனித நேயம், இன நல்லிணக்கம் போன்ற பல்வேறு நற்பண்புகளை ரமழான் மாதம் நமக்கு உணர்த்தியுள்ளதை நாம் படிப்பினையாகக் கொள்ள வேண்டும்.
நாடும், மக்களும் இன்று பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி சிறிதேனும் மீண்டுவரும் நிலையில், இந்த அவலம் தொடராது நாடும், மக்களும் மீட்சி பெற இந்த நன்னாளில் இறைவனைப் பிரார்த்திப்போம்.
இஸ்லாம் எப்போதும் மனிதனால் முடியாத ஒன்றைச் செய்யும்படி சொல்வதே இல்லை, சொன்னதுமில்லை.
நாம் நற்செயல்கள் செய்வது பெரியதல்ல. அதை நாள் தவறாது தொடர்ந்து செய்வது தான் சிறப்பானதாகும்.
அல்லாஹ்வின் உவப்புக்குரிய வழிகளில் பெருநாளைக் கொண்டாடுவோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)