
posted 1st May 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மே தின வாழ்த்து
நாடும், வீடும் வளம் பெற்று முன்னேறிட நாள்தோறும் உழைத்துக் கொண்டிருக்கும் உழைப்பாளர்கள் அனைவருக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள். இவ்வாறு முன்னாள் கல்முனை மாநகர சபை முதல்வரும் மெட்ரோ பொலிடன் கல்லூரியின் தவிசாளருமான கலாநிதி சிராஸ் மீராசாஹிப் விடுத்துள்ள மே தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
அந்த வாழ்த்துச் செய்தியில் மேலும்
மனிதராய்ப் பிறந்த அனைவரும் கடுமையான உழைப்பின் மூலமே அன்றாட வாழ்வினை நகர்த்திச் செல்கின்றனர் அந்தவகையில் உழைப்போம் உயர்வோமென உடலினை இயந்திரமாக்கி உழைப்பினை உரமாக்கி உலகத்தை இயக்க வைக்கும் உன்னத தோழர்களுக்கு மீண்டுமொருமுறை இனிய தொழிலாளர்கள் தின வாழ்த்துக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)