
posted 26th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மல்லாவியில் இடம்பெற்ற கடையடைப்பு
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பகுதியிலும் நேற்று செவ்வாய் வடகிழக்கு பகுதிகளில் இடம்பெற்ற கடையடைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக வர்த்தக சங்கங்கள் தமது தமது வர்த்தக நிலையங்களை பூட்டி ஆதரவு தெரிவித்துள்ளன.
இதேவேளை தனியார் பேரூந்து சேவைகள் எதுவும் இடம்பெறாத நிலையில் அரச பேரூந்து தனது சேவையினை முன்னெடுத்திருந்தது மல்லாவி பிரதேசம் , பேரூந்து நிலையங்கள் மக்கள் இன்மையால் வெறிச்சோடி காணப்பட்டன
இதேவேளை, அரச வங்கி மற்றும் பாடசாலைகள் என்பன திறந்திருப்பதுடன் , பாடசாலைகளில் மாணவர்களின் வரவின்மையும், ஆசிரியர்களின் வரவின்மையும் குறைவாகவும் காணப்பட்டிருந்தது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)