
posted 26th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மன். புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை புதிய அதிபராக அருட்சகோதரர் எஸ்.சந்தியோகு
மன். புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் புதிய அதிபராக அருட்சகோதரர் எஸ்.சந்தியோகு பதவியேற்கும் வைபவம் இடம்பெற்றுது.
இவர் கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை அதிபராகக் கடமை புரிந்தவராவர்.
அருட்சகோதரர் எஸ்.சந்தியோகுவின் இடம் மாற்றம் பரஸ்பர இடமாற்றமாக மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலை அதிபராக இருந்த அருட்சகோதரர் எஸ்.ஈ. றெஜினோல்ட்டுன் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மன்னார் மறைக்கல்வி இயக்குனர் அருட்பணி சீ. அன்ரனி டலீமா அடிகளார், ஹாதி நீதிபதி மௌலவி செய்னுல் ஆப்தீன் அஸீம், மன்னார் கல்விப் பணிப்பாளர் செல்வி ஜி.டி. தேவராஜ், அருட்சகோதரர் டென்சில் பெரேரா, கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி பாடசாலை அபிவிருத்திக் குழு செயலாளர் எந்திரி சம்பந்தன், புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் பழைய மாணவர் சங்க செயலாளர் எம். ரவி உட்பட இப் பாடசாலையின் முன்னாள், இந்நாள் இரு அதிபர்களும் கலந்து கொண்டு உரையாற்றினர்..
இந் நிகழ்வில் கல்முனையிலிருந்து வருகை தந்த கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலை கல்வி சமூகத்தின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)