
posted 20th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
மன்னார் கட்டுக்கரைக் குளத்திலிருக்கும் நீரைக்கொண்டு சிறுபோக செய்யத் தீர்மானம்
மன்னார் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான சிறுபோகக் கூட்டம் புதன்கிழமை (19) காலை உயிலங்குளத்தில் அமைந்துள்ள கட்டுக்கரைக்குள விவசாயிகள் கூட்ட மண்டபத்தில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெலின் தலைமையில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கடந்த 04.04.2023 அன்று கட்டுக்கரைக்குளத்தின் கீழான 2023ஆம் ஆண்டிற்கான பயிர்செய்கை முன்னோடிக் கூட்டமானது திட்ட முகாமைத்துவக் குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் இறுதி முடிவுக்கான கூட்டமாக இது அமைந்திருந்தது.
இக் கூட்ட முடிவில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்;
2023 ஆம் ஆண்டுக்கான இச் சிறுபோகக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்கள், துறைசார் விவசாய அமைப்புக்கள் யாவருடனும் ஒன்றிணைந்து மன்னார் மாவட்டத்தில் பிரதானமாக விளங்கும் கட்டுக்கரைக் குளத்தின் நீர் அளவுக்கு அமைவாக சிறுபோகம் தொடர்பான ஆலோசனைகளுக்கமைய தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது.
கட்டுக்கரைக்குளத்தில் தற்பொழுது 11.4 அடி நீர் காணப்படுவதனால் பத்து ஏக்கர் விவசாய காணி வைத்திருப்பவர்களுக்கு ஒரு ஏக்கர் புலவு காணி அதாவது பத்துக்கு ஒன்று என்ற விகிதத்தில் சிறுபோகம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளன.
ஏனைய மாவட்டங்களைப்போல அல்லாது மன்னார் மாவட்டத்தில் புலவில்தான் சிறுபோகம் செய்யப்படுவதால் இவ்வாறான தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன.
இம்முறை மன்னார் மாவட்டத்தில் சிறுதானியப் பயிர்ச் செய்கை 2500 ஏக்கரிலும், நெற்செய்கை 3665 ஏக்கரிலும் செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மூன்று , மூன்றரை மாத நெல்லினம் இம்முறை பயிர் செய்கைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அரச அதிபர் தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாண