
posted 22nd April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பெருநாள் வாழ்த்துக்கள்
இலங்கையில் இன்று கொண்டாடப்பட்ட நோன்புப் பெருநாள் தொடர்பிலான வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொள்வதில் பல்வேறு தரப்பினரும் பெரும் ஆர்வம் காட்டியுள்ளனர்.
நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் உட்பட பல்வேறு அரசியல் மற்றும் பிரமுகர்களும் முஸ்லிம் மக்களுக்கெனப் பெருநாள் வாழ்த்துச் செய்திகளை ஊடகங்கள் வாயிலாக வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக முஸ்லிம் அரசியல் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் தத்தமது முகநூல்கள் வாயிலாகவும் இம்முறை நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தனிநபர்களும் தமது முகநூல்கள் வாயிலாக பெருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)