
posted 19th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
பிள்ளைகளின் கல்வியைப் பணயமாக்க ஆசிரியர்களுக்கு இடமளிக்கப் போவதில்லை - ஜனாதிபதி
பிள்ளைகளின் கல்வியைப் பணயமாக்க ஆசிரியர்களுக்கு இடமளிக்கப் போவதில்லை எனவும், உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியை அடுத்த வாரத்திற்குள் ஆரம்பிக்கத் தவறினால் அவசரகால சட்டத்தைப் பயன்படுத்தி கல்வியை அத்தியாவசிய சேவையாக மாற்றுவதாகவும், பொறுப்புகளை புறக்கணிக்கும் ஆசிரியர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்
கல்வி மற்றும் உயர்கல்வி தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுகளின் 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட யோசனைகள் தொடர்பாக பகுப்பாய்வுக் கூட்டம் புதன்கிழமை (19) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பரீட்சை பணிகளை அத்தியாவசிய செயற்பாடுகளாக முன்னெடுத்துச் செல்வதற்கு அத்தியாவசிய சட்ட நடவடிக்கைகளை எடுக்க இருப்பதாகவும்
கடந்த வருடம் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளில் ஈடுபட்டவர்களை இம்முறையும் விடைத்தாள்களை திருத்த நடவடிக்கை எடுக்கும்படி பணித்துள்ளார்.
உயர்தர பரீட்சை விடைத்தாள்களைத் திருத்தும் பணிகளுக்கான மாற்று யோசனைகள் மற்றும் உரிய வேலைத் திட்டங்களை இவ்வார இறுதிக்குள் அறியத் தருமாறும் பரீட்சை தொடர்பான பணிகளை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்துமாறும் கல்வி துறைசார் அதிகாரிகளை பணித்துள்ளார்.
இப்பணியில் ஈடுபட மறுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது தொடர்பாக சட்டமா அதிபருடன் கலந்தாலோசிக்கப்படும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உயர் கல்வி மற்றும் சாதாரண தர கல்வி வசதிகளை கொண்ட சகல பாடசாலைகளுக்கும் இணைய வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத் திட்டத்தை முன்மொழியுமாறு தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வருடாந்தம் 10,000 பொறியியல் பட்டதாரிகளையும் 5,000 மருத்துவ பட்டத்தாரிகளையும் உருவாக்குவதற்கான வேலைத்திட்டமொன்றை அரச மற்றும் தனியார் பல்கலைக் கழகங்கள் இணைந்து அறிக்கை சமர்பிக்கும்படி பணித்துள்ளார்.
எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவினால் ஆரம்பிக்கப்பட்ட கிழக்கு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பில் ஆராய்வதற்கு இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொலவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள உப குழுவின் நடவடிக்கைகள் குறித்தும் இக் கூட்டத்தில் ஆராயப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)