பலவகைச் செய்தித் துணுக்குகள் (20.04.2023)

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பலவகைச் செய்தித் துணுக்குகள் (20.04.2023)

மல்லாகத்தில் ஷெல் மீட்பு

மல்லாகம் தெற்கு பகுதியில் உள்ள வாசிகசாலை ஒன்றுக்கு அருகாமையில் இருந்து ஆர்.பி.ஜி ஷெல் ஒன்று செவ்வாய்க் கிழமை (18) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்தில் இந்த ஷெல் இருப்பது அவதானிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

அதன்பின்னர் நீதிமன்ற நடவடிக்கையின் பின்னர் அவ்விடத்திடத்திற்கு வந்த பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் அந்த ஷெல்லினை மீட்டுச் சென்றுள்ளனர்.


நயினாதீவு நாகபூசணி அம்மனை பிரதிபலிக்கும் சிலையை அகற்றுவதற்கான வழக்கு

யாழ்ப்பாமணம் பண்ணையில் அமைக்கப்பட்ட நயினாதீவு நாகபூசணி அம்மனை பிரதிபலிக்கும் சிலையை அகற்றுவது தொடர்பான வழக்கை மேல் நீதிமன்றம் எதிர்வரும் மே 04ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நீதிபதி ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன், என். சிறீகாந்தா உள்பட 15 வரையான சட்டத்தரணிகள் முன்னிலையாகினர்.

முறைப்பாட்டாளர் இன்றி பொலிஸார் இந்த வழக்கை தொடுக்க உரிமை இல்லை என்ற கருத்தை சட்டத்தரணி சுமந்திரன் முன்வைத்து வாதத்தை தொடக்கினார்.

பலவகைச் செய்தித் துணுக்குகள் (20.04.2023)

தொலைபேசி மூலம் தமக்கு முறைப்பாடு கிடைத்ததாகவும் வன்முறைகள் ஏதும் ஏற்படக்கூடாது என்று தெரிவித்தே தாம் வழக்கு தொடுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து சட்டத்தரணிகள், சுமந்திரன், சிறீகாந்தா ஆகியோர் வாதங்களை முன்வைத்தனர்.

சிலை வைக்கப்படுவதில் தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் ஆனால், அதற்கு உரிய அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து வழக்கு தொடர்பில் எழுத்துமூல சமர்ப்பணங்களை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை எதிர்வரும் மே 4ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

நேற்று செவ்வாய் நடந்த இந்த வழக்கில் இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள், ஆதரவாளர்கள் என சுமார் 60 பேர் வரையிலானவர்கள் நீதிமன்றில் பார்வையாளர்களாக பங்கேற்றிருந்தனர். இதேவேளை நீதிமன்றத்தை சூழ அதிகளவான பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

புத்தாண்டு தினத்தில் தீவகத்துக்கு செல்லும் ஒரே பாதையில் பண்ணை சுற்றுவட்டத்தில் நயினாதீவு நாகபூசணி அம்மனைப் பிரதிபலிக்கும் விதமாக சிலை ஒன்று நிறுவப்பட்டிருந்தது. இந்த சிலையை நிறுவியது யார் என்று தெரியாத நிலையில் அதை அகற்றுவதற்கு பொலிஸார் நீதிமன்ற உத்தரவை பெற்று அறிவித்தலை ஒட்டியிருந்தனர். இதைத் தொடர்ந்து நல்லை ஆதீனத்தில் கூடிய இந்து அமைப்புகள் அம்மன் சிலையை அகற்றுவதற்கு ஆட்சேபம் தெரிவிக்க நேற்று முன்தினம் முடிவு எடுத்திருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது



தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரின் வீட்டு வளாகத்தில் தீக்குளித்தார் என்று கூறப்படும் பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வலி. வடக்கு பிரதேச சபையில் பணிபுரியும் பாலகிருஷ்ணன் விஜிதா (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

குப்பிளானை சேர்ந்த அந்தப் பெண் வலி. வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரான இலங்கை தமிழரசு கட்சியின் சோ. சுகிர்தனின் ஏழாலையில் உள்ள வீட்டுக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுள்ளார்.

அவரின் வளாகத்துக்குள் சென்ற பெண் கொண்டு சென்ற பெற்றோலை தனது உடலில் ஊற்றி தீ வைத்துள்ளார். பின்னர் அங்கிருந்த கிணற்றில் குதித்துள்ளார் என்று கூறப்படுகின்றது.

மேலும், இதைக் கண்டவர்கள் அந்தப் பெண்ணை காப்பாற்றி தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்ப்பித்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அந்தப் பெண் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


பலவகைச் செய்தித் துணுக்குகள் (20.04.2023)

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)