பரீட்சையில் சித்தி

உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offe

Obituary - 8 Days + 2

£307.00 Was £384.00

Obituary - 6 Days + 2

£274.00 Was £342.00

Obituary - 4 Days + 1

£135.00 Was £168.00

Obituary - 2 Days + 1

£77.00 Was £96.00

Remembrance - 7 Days

£134.00 Was £168.00

Remembrance - 5 Days

£106.00 Was £132.00

Remembrance - 3 Days

£67.00 Was £84.00

Anniversary - 7 Days

£134.00 Was £168.00

Anniversary - 5 Days

£106.00 Was £132.00

Anniversary - 3 Days

£67.00 Was £84.00

பரீட்சையில் சித்தி

திறமை அடிப்படையில் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிஉயர் தரத்திற்கு ( MSO - Supra Grade ) தரம் உயர்த்துவதற்கான போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்தவர்களின் பெயர் பட்டியல் பொதுச் சேவை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படியாக, நிந்தவூர் பிரதேச செயலக நிருவாகப் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எச்.எம்.ஏ. ஹஸன் மற்றும் காணிப் பிரிவின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.எம். றாபீ ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் இருவருக்குமான முறையான பதவி நியமனம் (நிருவாக உத்தியோகத்தர் பதவி) பொதுச் சேவை ஆணைக்குழு மற்றும் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வழங்கப்படவுள்ளது.

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் சேவையின் அதிஉயர் தரத்திற்கு ( MSO - Supra Grade) தெரிவு செய்யப்பட்டுள்ள இவ்விரு உத்தியோகத்தர்களுக்கும் பிரதேச செயலகம் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டதுடன் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.

பிரதேச செயலாளர், சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப் தலைமையில் இவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு நடைபெற்ற போது பிரதேச செயலக பணிக்குழாமினர் கலந்து கொண்டனர்.

இதன்பொது பிரதேச செயலாளர் சட்டத்தரணி லதீப் உரையாற்றுகையில் சித்தி பெற்றுள்ள சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் இருவரும் சேவை மூப்புக் கொண்டவர்கள் என்றும் அர்ப்பணிப்பான மக்கள் சேவையை முன்னெடுத்து வருபவர்கள் எனவும் பாராட்டுத் தெரிவித்தார்.

பரீட்சையில் சித்தி

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)