
posted 21st April 2023
துயர் பகிர்வோம்
துயர் பகிர்வோம்
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
இலங்கையில் புதிதாக கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை, வேண்டாம் என்று கோரி வடக்கு - கிழக்கு பெண்கள் கூட்டு என்ற அமைப்பு வியாழக்கிழமை (20) மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியது.
அம்பாறை மாவட்டத்தின் மத்திய முகாமில் உள்ள நான்காம் கிராமம் பாமடி என்ற பிரதேசத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்றது .
அதன்போது அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இந்த கூட்டு முன்னணியின் சுமார் 300 பெண்கள் மும்மொழிகளிலுமான சுலோகங்கள் பொறித்த பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)