
posted 4th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நிந்தவூர் விவசாயிகளுக்கு இலவச உர விநியோகம் ஆரம்பம்
அம்பாறை மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவிருக்கும் சிறுபோக நெற் செய்கைக்கான, அரசின் இலவச அடிக்கட்டு உர (ரி.எஸ்.பி) விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி மாவட்டத்தின் முக்கிய விவசாயப் பிரிவான நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையப் பிரிவில், சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ள விருக்கும் விவசாசிகளுக்கு கடந்த திங்கட் கிழமை முதல் இந்த இலவச அடிக்கட்டு உர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல்.ஏ. ஹார்லிக் அவர்களின் சீரான நெறிப்படுத்தலில் மூன்று முக்கிய மத்திய களஞ்சியங்களுடாக இந்த உரவிநியோகம் இடம்பெற்று வருகின்றது.
இதற்கமைவாக நிந்தவூர் கமநல சேவைகள் மத்திய நிலையப் பிரிவில் 2538.35 ஹெக்டயர் சிறுபோக நெற்செய்கைகென ஒரு லட்சத்து 37933.53 கிலோ கிராம் அடிக்கட்டு (ரி.எஸ்.பி) உரம் விவசாயிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட விருக்கின்றது.
கடந்த காலங்களில் போதிய உரமின்மையால் பெரும் சலிப்படைந்திருந்த விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ள மேற்படி இலவச உரவிநியோக ஆரம்ப நிகழ்வுகள் நிந்தவூரில் சிறப்பாக நடைபெற்றன.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட கமநல சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஹார்லிக் தலைமையல் நடைபெற்ற குறித்த ஆரம்ப நிகழ்வுகளில், அம்பாறை மாவட்ட கமநல அபிவிருத்தி பிரதி ஆணையாளர் திருமதி சாமினி சோமதாஸ பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், இலவச உர விநியோகத்தையும் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
மேலும் பிரதேச விவசாயிகளுக்கான இந்த இலவச உர விநியோகத்தை எதிர்வரும் 10 ஆம் திகதிக்குள் பூர்த்தி செய்வதற்கு ஆவன செய்யப்பட்டுள்ளதாக ஹார்லிக் தெரிவித்தார்.
தவிரவும் சர்வதே அபிவிருத்திக்கான அமெரிக்க முகவர் அமைப்பின் (யூஎஸ் எய்ட்) நிதி உதவியுடன் 36000 மெட்ரிக் தொன் ரி.எஸ்.பி உரம் இலங்கைக்கு அண்மையில் கையளிக்கப்பட்டது. இலங்கையின் 25 மாவட்டங்களிலுமுள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான நெல் விவசாயிகளுக்கு இலவசமாக இந்த உரம் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)