
posted 16th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
*நிந்தவூரில் வர்த்தக கண்காட்சி* Ninthavur Commercial Exhibition
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியிலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளில் இடம்பெற்ற சமுர்த்தி அபிமானி வர்த்தக கண்காட்சியும், விற்பனையும், நிகழ்ச்சித் திட்டமும் நிந்தவூர் பிரதேச செயலகப் பிரிவில் வெற்றிகரமாக நடைபெற்று நிறைவடைந்தது.
சிரேஷ்ட தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி. அன்வரின் நெறிப்படுத்தலிலும், நிந்தவூர் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்புடனும் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கண்காட்சியும், விற்பனையும் மூன்று தினங்கள் வெற்றிகரமாக இடம்பெற்றன.
நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். அப்துல் லதீப் தலைமையில் இடம்பெற்ற கண்காட்சி நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ. ஜெகதீஸன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எம்.எஸ்.எம். சப்றாஸ், உதவி பிரதேச செயலாளர் ரி. ஜெஸான் சிரேஸ்ட தலைமைப்பீட சமுர்த்தி முகாமையாளர் ஏ.சி. அன்வர் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
சமுர்த்தி பயனாளிகளின் உற்பத்திகள் பெருமளவில் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், அமோக விற்பனையும் இடம்பெற்றமை குறிப்பித்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)