
posted 26th April 2023
துயர் பகிர்வோம்
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
நடைபெற்ற ஹர்த்தால் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளி உலகிற்கு எண்பித்துள்ளனர்
இம்முறை அரசாங்கம் இருக்கும் நிலையில் தமிழ் மக்களுக்கு சட்ட ரீதியில் அரசு இழைக்கப்படும் விடயத்தை நடைபெற்ற இந்த ஹர்த்தால் மூலம் தமிழ் மக்களின் ஒற்றுமையை வெளி உலகிற்கு தெளிவுப்படுத்தியுள்ளனர் என முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்தார்.
செவ்வாய் கிழமை (25) வடக்கு கிழக்கு பகுதியிலுள்ள எட்டு மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் தொடர்பாக வினவியபோது முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் தெரிவிக்கையில்;
வடக்கு கிழக்கிலுள்ள எட்டு மாவட்டங்களில் அனைத்து தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளும் மற்றும் சிவில் அமைப்புக்கள் மற்றும் ஏனைய பொது சன அமைப்புக்கள், தொழிற் சங்கங்கள் எல்லோரினதும் ஒத்துழைப்புடன் நடைபெற்ற ஹர்த்தால் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
பிரதான நகரங்கள் மற்றும் கிராம பகுதிகளிலும் இயல்பு நிலை ஸ்தம்பிதம் அடைந்திருந்தன. ஹர்த்தாலுக்காக முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது இதிலிருந்து தெரிகின்றது.
இது அரசாங்கத்துக்கு மட்டுமல்ல சர்வதேசத்தக்கும் மக்கள் இதன் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். ஹர்த்தால் தமிழ் மக்களுக்கு புதிய விடயம் அல்ல. கடந்த காலங்களில் இவ்வாறு பலமுறை செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இம்முறை அரசாங்கம் இருக்கும் நிலையில் தமிழ் மக்களுக்கு சட்ட ரீதியில் இழைக்கப்படும் விடயத்தை வெளி உலகிற்கு இந்த ஹர்த்தால் மூலம் தமிழ் மக்கள் தெளிவுப்படுத்தியுள்ளனர்.
போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அரசாங்கம் இவற்றுக்கான தீர்வுக்குச் செல்லாது வேறு நிறுவனங்கள் மூலமாக தமிழ் மக்களை அடக்குவதில் முனைப்பு காட்டி வருகின்றது.
இவ்வாறான போராட்டங்களால்தான் எமது பிரச்சனைகளை நாம் வெளியில் கொண்டுவர முடியும். கடந்த காலத்தில் இவ்வாறு நடாத்தப்பட்ட போராட்டங்களால் பலன் எட்டவில்லை என்று சொல்ல முடியாது. ஆனால், அரசுக்கு எதோ ஒரு விதத்தில் அழுத்தம் சென்று கொண்டிருக்கின்றது.
ஜனநாயகத்தை அழித்து ஒழிக்கும் அரசின் திட்டத்துக்கு வடக்கு கிழக்கு மக்கள் மாத்திரம் அல்ல, தென் இலங்கை மக்களும் ஆதரவு வழங்குவர் என்பதில் ஐயமில்லை.
அரசுக்கு எதிராக இவ்வாறான போராட்டத்தை முன்னெடுக்கின்றபோது தமிழ் மக்களிடம் வாக்குப் பெற்று பாராளுமன்றம் சென்றுள்ள ஓரிரு தமிழ் கட்சிகள் ஒத்துழைக்காது இருப்பது அரசுக்கு சாதகமாக இருந்து தமிழ் மக்களை அழிக்கும் கட்சிகளாகவே இருக்கின்றார்கள் என தோன்றுகின்றது.
ஜனநாயகப் போராட்டத்தில் நாம் ஒன்றுபட்டு செயல்படாவிட்டால் தமிழர்களுக்கு ஆபத்துக்கள் மேலும் அதிகரிக்கும் நிலையே காணப்படுகின்றது.
ஜனநாயக மூலம் முன்னெடுக்கப்பட்ட ஹர்த்தால் போராட்டம் எமக்கு வெற்றி என்றே கூற வேண்டும். அரசு தமிழ் மக்களுக்கு தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஜனநாயகப் போராட்டத்தில் தமிழ் மக்கள் பின்நிற்க மாட்டார்கள் என்பது வெளிச்சமாகி வருகின்றது என்றார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)